மீண்டும் துவங்கும் துப்பறிவாளன் 2 படத்தின் சூட்டிங்... விஷால் அறிவிப்பு!
சென்னை : நடிகர் விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் லண்டனில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் மிஷ்கின் மற்றும் விஷாலுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டு படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் மீண்டும் வரும் ஜனவரி முதல் லண்டனில் துவங்க உள்ளதாக விஷால் அறிவித்துள்ளார்.

துப்பறிவாளன் படம்
நடிகர் விஷால், பிரசன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான துப்பறிவாளன் படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் டைரக்ட் செய்திருந்தார். சிறப்பான திரில்லிங் அனுபவத்தை இந்த படம் ரசிகர்களுக்கு கொடுத்தது. விஷாலின் மாறுபட்ட நடிப்பை இந்த படத்தில் காண முடிந்தது.

துப்பறிவாளன் 2 திரைப்படம்
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து துப்பறிவாளன் 2 படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் துவங்கியது. நடிகர் பிரசன்னா இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வந்தார். இளையராஜா இசையில் படம் உருவாகி வந்தது.

விஷால் -மிஷ்கின் பிரச்சனை
இந்நிலையில் படப்பிடிப்பின்போது இயக்குனர் மிஸ்கின் மற்றும் விஷாலுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டன. படத்தின் சூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் விஷால் மற்றும் மிஷ்கின் இருவரும் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

இயக்குனராகும் விஷால்
இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் அறிவித்திருந்தார். ஆயினும் இதன் படப்பிடிப்பு துவக்கம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.

விஷால் அறிவிப்பு
இந்நிலையில் துப்பறிவாளன் 2 படம் குறித்து தற்போது விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரியில் லண்டனில் துவங்க உள்ளதாகவும் இரண்டு மூன்று மாதங்களில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய உள்ளதாகவும் விஷால் அறிவித்துள்ளார்.

இளையராஜா இசை
ஏற்கனவே அறிவித்தபடி விஷாலே இந்த படத்தை இயக்க உள்ளார். மேலும் இசையமைப்பை இளையராஜா மேற்கொள்ள உள்ளார். இந்த அறிவிப்பு விஷால் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சிறப்பான அனுபவம்
துப்பறிவாளன் படம் மிகச் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. அந்த படத்தின் திரில்லர் அனுபவம் மறக்க முடியாதது. இந்த படத்தை மிஸ்கின் மிகச் சிறப்பாக இயக்கியிருந்தார். துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்க உள்ள நிலையில் அதே மாதிரியான அனுபவத்தை ரசிகர்களுக்கு இந்தப்படம் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











