சியான் 62 அப்டேட்.. ஹீரோயின் யார் தெரியுமா?.. நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.. வெளியான அறிவிப்பு
சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் முதலில் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் இந்தப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் அருண்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத விக்ரம் பிற ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தார். சூழல் இப்படி இருக்க பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார் விக்ரம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆனது. இதனால் சினிமாவில் விக்ரம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.

இரட்டை குதிரையில் சவாரி: சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் உருவாகியிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஒரு பக்கம் காசி, பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும், மறுபக்கம் ஜெமினி, தூள், தில் என கமர்ஷியலுக்கு தீனி போடும் படங்களில் நடித்து இரட்டை குதிரையில் லாவகமாக பயணித்தார். இதனால் கரியரின் உச்சத்திற்கு சென்று இப்போது மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.
ஆதித்த கரிகாலன்: விக்ரம் நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது. ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தை ஏற்று அதில் மிரட்டியிருந்தார் விக்ரம். அடுத்ததாக பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் தங்கலான் படம் அவரது திரையுலக வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
விரைவில் ரிலீஸ்: முதலில் அந்தப் படம் ஜனவரியில் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் தற்போது ஏப்ரலுக்கு பிறகு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே பெரிய ஹிட் ஒன்றுக்காக காத்திருக்கும் விக்ரமுக்கு தங்கலான் படத்தின் மூலம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த படம்: சூழல் இப்படி இருக்க அவர் அடுத்ததாக சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வீடியோ ஒன்றும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஏற்கனவே சித்தா படத்தின் மூலம் இயக்குநர் அருண்குமார் கவனம் ஈர்த்தவர். விக்ரமுடன் அவர் இணைந்திருக்கும் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
துஷாரா விஜயன்: இந்நிலையில் இந்தப் படத்தில் சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் துஷாரா விஜயன் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். துஷாரா சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளினார். இப்போது விக்ரமுடன் இணைந்திருப்பதால் கண்டிப்பாக இதிலும் தனது நடிப்பை வைத்து ஸ்கோர் செய்வார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











