விஜய்யுடன் வந்த திரிஷா.. முன்னாடியே சிக்னல் கொடுத்துருக்காங்க.. நாமதான் கவனிக்கல.. என்ன ஆனது தெரியுமா?
சென்னை: சங்கீதா விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கும் பரபரப்பான நிலையில்; நடிகை திரிஷாவுடன் விஜய் ஒரு திருமண விழாவுக்கு வந்திருந்தார். அப்படி அவர்கள் ஜோடியாக; அதுவும் ஒரே நிறத்திலான உடையை அணிந்துவருவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அப்படி வந்ததிலிருந்து ஒட்டுமொத்த திரைத்துறையிலும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில நாட்களாக அந்த விஷயம்தான் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று அவரது மனைவி சங்கீதா பிப்ரவரி 27ஆம் தேதி பெரிய குண்டை தூக்கி போட்டார். அதற்கடுத்து சங்கீதாவையே விஜய்யின் ரசிகர்களும், தொண்டர்களும் சமூக வலைதளங்களில் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார்கள். மேலும் அவருக்கு பின்னணியில் இருந்துகொண்டு திமுகதான் இயக்குகிறது எனவும் புதிய தியரியை கண்டுபிடித்தார்கள். ஆனால் தனக்கு ஏற்பட்ட உச்சக்கட்ட மன உளைச்சல் காரணமாகத்தான் அவர் அதிரடி முடிவை எடுத்திருக்கிறார் என்பதும்; சங்கீதாவுக்கு பணம் வாங்கும் அளவுக்கு குறைந்தவர் இல்லை எனவும் ஆதரவு அலைகள் எழுந்தன.

நடிகையை பற்றி தேடல்: இந்த டைவர்ஸ் மனுவிலேயே முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால்; சங்கீதா குறிப்பிட்டிருந்த நடிகைதான். அவர் திரிஷாவைத்தான் சொல்கிறார்; ஏனெனில் அவர்தான் விஜய்யுடன் இருந்த புகைப்படங்களை அவ்வப்போது ஷேர் செய்து வந்தார் என கூறினார்கள். ஆனால் பெயர் அதிகாரப்பூர்வமாக தெரியும்வரை எதையும் உறுதியாக சொல்லக்கூடாது என்பதால் நீரு பூத்த நெருப்பாக புகைந்துகொண்டிருந்தது இவ்விவகாரம். அப்படிப்பட்ட நிலைமையில்தான் அதில் எண்ணெய்யை ஊற்றினார் விஜய்.
என்ன செய்தார்?: எல்லோரும் திரிஷாவை நோக்கி இவ்விவகாரத்தில் வெளிச்சத்தை திருப்பியிருக்கும் நிலையில்; அவருடனேயே தயாரிப்பாளரின் மகன் திருமணத்துக்கு வந்திருந்தார். அதிலும் ஒரே கலர் டோனில் அவர்களது ட்ரெஸ் இருந்தது மேற்கொண்டு அதிர்ச்சி. இப்படி மீண்டும் மீண்டும் எங்கள் அண்ணா எங்களை புண்படுத்துகிறாரே; இப்படி இருந்தால் அவருக்கு நாங்கள் எப்படி சப்போர்ட் செய்வது என புலம்பி தள்ளுகிறார்கள் தவெகவினர். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அப்செட்டான சங்கீதா?: இது ஒருபக்கம் இருக்க விஜய் தனது குடும்பத்தை பற்றி துளியும் நினைத்து பார்க்காதவர் என்பது இதன் மூலமே உறுதியாகிவிட்டது. விவாகரத்தை மனைவி கேட்டிருக்கும் நிலைமையில் அதை கொடுக்காமலேயே இன்னொரு நடிகையுடன் பொது வெளிக்கு வருவதெல்லாம் திமிர்தனத்தின் உச்சம். இதை பார்த்து சங்கீதாவுக்கும், ஜேசன் சஞ்சய், சாஷாவுக்கும் எவ்வளவு மன வலி ஏற்பட்டிருக்கும். அதையெல்லாம் யோசிக்கவில்லையே என நடுநிலையாளர்களும் விஜய்க்கு எதிரான ஸ்டாண்டை எடுத்திருக்கிறார்கள்.
திரிஷா பாதுகாவலர் பதவி: இந்நிலையில் யாருமே விஜய், திரிஷா ஒன்றாக வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் அவர் தரப்பிலிருந்து இதுகுறித்து முன்கூட்டியே சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கிறது போல் தோன்றுகிறது. அதாவது திரிஷாவின் பாதுகாவலர்களில் ஒருவர் ஆரோன் சுரேஷ் என்பவர், "அனைத்து வதந்திகளையும் தாண்டி எழுந்து வருவதற்கான நேரம் இது" என குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களோ, 'விஜய் - திரிஷா வருவதைத்தான் மறைமுகமாக இவ்வாறு சொல்லியிருக்கிறார் போல; இது திரிஷாவுக்கு தெரியாமலா பதிவிட்டிருக்க முடியும். அப்போ முன் கூட்டியே சொல்லிருக்காங்க என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications















