ஹீரோ .. ஹீரோ ..

By Staff

திருமலை படத்தில் தனது கெட்-அப்பை மீண்டும் மாற்றியுள்ளார் விஜய்.

சமீப காலமாகவே தனது தோற்றத்தை மாற்றிக் கொள்ள அவர் பிரயத்தனம் எடுத்து வருகிறார். வசீகரா படத்தில்தனது வணங்கா முடியை ஒட்ட அழுத்தி சீவி நடித்தார். இப்போது இதுவரை அவர் செய்யாத ஒரு காரியத்தைச்செய்துள்ளார். ஆம், மீசையை எடுத்துவிட்டார். திருமலை படத்துக்காக தான் இந்த மீசை தியாகத்தை செய்துள்ளார்விஜய்.

கீதை படம் இழுத்துக் கொண்டே போனதால் பெரும் கோபத்தில் இருக்கிறார் விஜய். ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டின்போது எப்படியாவது இந்தப் படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்று டைரக்டரையும்தயாரிப்பாளரையும் நெருக்கிப் பார்த்தார்.

ஆனால், ஹீரோயின் மீரா ஜாஸ்மீன் செய்த குளறுபடியால் படம் இழுத்துக் கொண்டே போய்விட்டது. இதனால்சிலம்பரசனின் தம் படத்தை கெளண்டர் செய்யத் திட்டமிட்டிருந்த விஜய்யின் திட்டம் அம்பேலாகிவிட்டது.

சமீபத்தில் தான் கீதை படப்பிடிப்பு முடிந்தது. ரீ-ரெக்கார்டிங் உள்ளிட்ட சில டெக்னிகல் விஷயங்கள் மட்டுமேபாக்கி. ஆனால், அதில் எல்லாம் கவனம் செலுத்த விஜய் விரும்பவில்லையாம். தனது அடுத்த படமானதிருமலைக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்துவிட்டார் விஜய்.

இந்தப் படத்தில் மீசை இல்லாமல் நடித்தால் நல்லா இருக்கும் என டைரக்டர் அபிப்ராயப்பட, மேக் அப் ரூமுக்குள்போய் மீசையை மழித்துவிட்டு வந்து நின்றாராம் விஜய்.

பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. விஜய்யை வைத்துஅவர்கள் எடுக்கும் முதல் படம் இது. இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் முழுவதையும் முழுக்கமுழுக்க செட் போட்டே எடுத்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம் (ஏன் வெளியே வெயில் அதிகம்இருப்பதாலா?)

இதற்காக, சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவின் ஒரு பக்கத்து சுவரை இடித்துவிட்டு, மரத்தால் பிரம்மாண்டமான செட்டுகளை போட்டு வருகின்றனர். கட்டிடங்கள், சாலைகள்என பலவிதமான அமைப்புகளுடன் செட்கள் தயாராகி வருகின்றன.

விஜய்யின் துள்ளாத மனம் துள்ளும் படததைத் தான் நிறைய செட் போட்டு எடுத்தார்கள்.அதற்குப் பிறகு அதிக அளவில் செட் போடுவது திருமலை படத்துக்குத் தானாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X