மம்முட்டியை சிறைவைத்த அமெரிக்க அதிகாரிகள்!

கடந்த ஏப்ரல் 29ம் தேதி இச் சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் பிரபலமான வழக்கறிஞரும், நியூயார்க் நகர கவுன்சிலர் பதவிக்கான குடியரசுக் கட்சி உறுப்பினருமான ஸ்டான்லி ஜெ கலாதாரவின் அழைப்பின் பேரில் நியூயார்க் சென்றார் மம்மூட்டி.
நியூயார்க்கின் ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் இறங்கியதும், அவரது பாஸ்போர்ட்டில் பெயரைப் பார்த்தவுடன் அவரை அமெரிக்க குடியுரிமைத்துறையினர் தனியறைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு எப்பிஐ அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
காரணம், மம்முட்டியின் பெயர் தான். பாஸ்போர்ட்டில் அவரது பெயர் 'முகம்மது குட்டி இஸ்மாயில் பனிபரம்பில்' என்று உள்ளது. பொதுவாக முகம்மது என்ற பெயருடன் யார் வந்தாலும் அவரை இப்படி நீண்ட நேரம் நிறுத்தி வைத்து விசாரிப்பது அமெரிக்காவில் நடைமுறையே ஆகிவிட்டது.
அந்த வகையில் தான் மம்முட்டியும் நிறுத்தி வைக்கப்பட்டாராம். பின்னர் இந்திய தூதரக அதிகாரிகளுக்குத் தகவல் தந்தனர் மம்முட்டியை அழைத்துச் செல்ல வந்தவர்கள். இதையடுத்து இந்தியத் தூதரகம் தலையிட்டு அவரைப் பற்றி எடுத்துச் சொல்லி அழைத்துச் சென்றார்களாம்.


Click it and Unblock the Notifications











