Prabhu Net Worth - கோலிவுட்டின் டாப் பணக்காரர்களில் ஒருவர்.. இளைய திலகம் பிரபுவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நடிகர்களில் ஒருவர் சிவாஜி கணேசன். நடிப்பு பல்கலைக்கழகம் என ரசிகர்களாலும், திரையுலகினராலும் அழைக்கப்படும் இவருக்கு பிரபு, ராம்குமார் என்ற மகன்களும், இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். இவர்களில் பிரபுவும் கோலிவுட்டில் பிரபலமான நடிகராக வலம் வந்தார். அவர் இன்று தனது 67ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படும் சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபு ஆவார். 1982ல் லாட்டரி டிக்கெட் படம் மூலம் பிரபு சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். பி.வாசு இயக்கத்தில் அவரும், குஷ்பூவும் நடித்த சின்னத்தம்பி படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்தில் பிரபுவின் மழலைத்தனமான நடிப்பு இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. அதேபோல் ரஜினியுடன் தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

Today is Prabhus birthday Accordingly Here is the Detailsa about his Net Worth

ரஜினி, கமல்: சினிமாவில் கதாநாயகனாக மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியவர் பிரபு. ரஜினியுடன் 80களில் நடித்ததற்கு பிறகு மெகா ஹிட்டான சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார். அதிலும் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அதேபோல் கமல் ஹாசனுடன் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் நடித்து அதகளம் செய்திருப்பார். சமீபத்தில் வாரிசு படத்தில் சரத்குமாருக்கு நண்பராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கன்னக்குழி நாயகன்: பிரபு மிகச்சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்தவர். குறிப்பாக அவரது கன்னத்தில் விழும் குழிக்கென்றே பலரும் ரசிகர்களாக இருந்தனர். பெங்களூருவில் படித்த பிரபுவுக்கு ஆரம்பத்தில் அவ்வளவாக தமிழ் பேச வராது. பிரபு பள்ளிக்கூடத்தில் படித்தபோது பெங்களூருவில் கருணாநிதியை சந்தித்தார். அப்போது தனக்கு தமிழ் அவ்வளவாக வராது என்று சொல்ல; அதற்கு கருணாநிதியோ உன் அப்பா போல் தமிழ் பேச யாராலும் முடியாது. ஆனால் நீயோ தமிழ் அவ்வளவாக வராதுனு சொல்றியே என நக்கலடித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

பிரபுவின் குடும்பம்: இருந்தாலும் நடிக்க வந்த பிறகு தமிழை சரளமாக பேச ஆரம்பித்தார். பிரபுவுக்கு விக்ரம் பிரபு என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்களில் விக்ரம் பிரபு நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா சென்னையில் தொழில் செய்துவருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தான் அவருக்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் திருமணம் நடந்தது. அது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபு சொத்து மதிப்பு: இளைய திலகம் பிரபு இன்று 67ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். சூழல் இப்படி இருக்க அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி பிரபு மட்டும் சம்பாதித்த சொத்து என்றால் அது கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய்வரை வரும் என்கிறார்கள். ஏனெனில் இப்போதும் அவர் குணசித்திர வேடங்களில் நடித்துவருகிறார். அதற்கு 2 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்குகிறாராம்.

அவர் தனது சொந்த சம்பாத்தியத்தில் கோயமுத்தூர், டெல்லி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் வீடுகள் வைத்திருக்கிறாராம். அதேபோல் விளம்பர மாடலாகவும் இருந்துவருகிறார். இவை தவிர்த்து சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம், சென்னையில் சாந்தி தியேட்டர், கல்யாண மண்டபம், மல்டி காம்ப்ளக்ஸ் என பல தொழில்களையும் செய்துவருகிறாராம். இதன் மூலமும் அவருக்கு வருமானம் கொட்டுகிறது.

சிவாஜியின் சொத்து: பிரபு தனியாக சம்பாதித்தது இப்படி என்றால் சிவாஜி சம்பாதித்த சொத்துக்களில் சிலவும் பிரபுவுக்கு சென்றிருக்கிறது. அதனையும் சேர்த்தால் இளைய திலகம் பிரபுவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்வரை இருக்கும் என்கிறார்கள். இருந்தாலும் இந்த சாந்தி தியேட்டர் விவகாரம்தான் இப்போது நீதிமன்றத்தில் வழக்காக நடந்துகொண்டிருக்கிறது. மேலும் தனது சகோதரிகளுக்கும் ஒழுங்காக அவர் சொத்தை பிரித்து கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே அந்த சொத்து விவகாரத்தால்தான் ஐஸ்வர்யாவின் முதல் திருமண வாழ்க்கை பாதியில் முடிந்துவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரனை ஐஸ்வர்யா திருமணம் செய்தபோது பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் வரதட்சணையை பிரபு வழங்கியதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X