‘கார்த்திகேயா 3’ படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி.. ஆனால், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!

சென்னை: தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த கார்த்திகேயா படத்தின் மூலம் ஹீரோ நிகில் நாடு முழுவதும் பிரபலமடைந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த நிலையில், கார்த்திகேயா 3 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் கார்த்திகேயா, நிகில், ஸ்வாதி, ராவ் ரமேஷ், ஜெயபிரகாஷ், சகதேவாக கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அமானுஷ்யங்கள் நிறைந்த மர்ம கதையை அடிப்படையாக கொண்டு உருவான இக்கதையில் நிகில் மருத்துவராக நடித்திருந்தார்.

Tollywood Actor Nikhil Siddharth Officially Confirms Karthikeya 3

கார்த்திகேயா: சுப்ரமணியபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்ரமணியேஸ்வர ஸ்வாமி கோவில் சில மர்ம மரணங்களால் மூடப்பட்டுள்ளது, இதன் பின்னணியில் உள்ள கதையை கண்டுபிடிக்க முயற்சிக்கும் அனைவரும் கொடிய பாம்பு கடியால் கொல்லப்படுகிறார்கள். இந்த இடத்திற்கு மருத்துவ குழுவுடன் வருகிறார் காத்ரிக் (நிகில்). அவர் அங்கு இறங்கியதும், அவருக்கும் அவரது குழுவினருக்கும் விசித்திரமான விஷயங்கள் நடக்கத் தொடங்குகின்றன. இது என்ன என்பதை ஆராச்சி செய்யும் நிகில், கோயிலின் மர்மம் என்ன? பாம்பு கடியால் மக்கள் ஏன் இறக்கிறார்கள்? என்பதை கார்த்திகா படத்தின் கதையாகும். இத்திரைப்படம் பல மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

Tollywood Actor Nikhil Siddharth Officially Confirms Karthikeya 3

கார்த்திகேயா 2: இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திகேயா 2 கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நிகிலுக்கு ஜோடியாக அனுபமா நடித்திருந்தார். சந்து மொண்டேட்டி இயக்கிய இந்த படத்தை, விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் தயாரித்திருந்தனர். சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லர் ஜானரில் புராண மற்றும் வரலாற்றுக் கதைகளை மையப்படுத்தி உருவான இப்படம், தெலுங்கில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.

கார்த்திகேயா 3: கார்த்திகேயா படத்தின் இரண்டு பாகமும் வசூலை அள்ளிய நிலையில், இப்படத்தின் மூன்றாம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், கார்த்திகேயா மூன்றாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் நிகில் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அட்வென்ச்சரஸ் த்ரில்லர் திரைப்படமான கார்த்திகேயா படத்தின் மூன்றாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் வேலையை இயக்குனர் சந்து மொண்டேடி விரைவில் தொடங்கவுள்ளார் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X