நடிகர் ராம் சரண் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கார்.. எத்தனை கோடினு தெரியுமா?

சென்னை: தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை வாங்கி உள்ளார். அதன் விலை கேட்டு இணையவாசிகள் அதிர்ந்து போய் உள்ளனர்.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் ராம் சரண். சிரஞ்சீவியின் மகனான இவர் ஹீரோவாக அறிமுகமான முதல் படமே, பிரம்மாண்ட வெற்றி பெற்று, வசூலை பெற்றுத்தந்து ராம் சரணுக்கு சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. இதையடுத்து, எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான மகதீரா படத்தில் நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து ராம்சரணை ஒரு மாஸ் ஹீரோ என பெயர் எடுக்க வைத்தது.

Ram Charan game changer

ராம்சரண்: இதையடுத்து, ராஜமவுலி இயக்கத்தில் RRR படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றது. உலக அளவில் மாஸ்காட்டியது. அந்த படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ஆர் சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'game Changer' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம், தமிழ், தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இதில், எஸ்ஜே சூர்யா, ஜெயராம், அஞ்சலி, ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் ராம்சரணுடன் இணைந்து நடித்துள்ளனர். கியாரா அத்வானி படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சொகுசு கார்: டாப் நடிகரான ராம்சரண் புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை வாங்கி உள்ளார். புதியதாக வாங்கிய அந்த காரில், தனது மனைவி உபாசனா மற்றும் மகளுடன் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த காரில் ஒரு முழு சார்ஜில் 530 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த அதீத ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 102 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் இந்த கார் ரூ. 7.5 கோடி என்கிற மிக மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விலை என்ன தெரியுமா: இந்தியாவில் இந்த காரை முதலில், பாஷ்யம் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த பாஷ்யம் யுவராஜ் வாங்கினர். இதைத் தொடர்ந்து இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வாங்கினர். தற்போது இந்த ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே காரை ராம்சரண் வாங்கி இருக்கிறார். கார் பிரியரான ராம் சரணுக்கு ஏற்கனவே பல சொகுசு கார்கள் இருக்கும் நிலையில் தற்போது இந்த விலை உயர்ந்த காரை வாங்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X