Don't Miss!
- News
உயரப் போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு
- Finance
7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கடவுளே... படம் வசூலை வாரிக் குவிக்கனும்… விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் நடிகர்!
சென்னை : ஆர்.ஆர்.ஆர் வெளியான கையோடு 41நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்ல உள்ளார் ராம்சரண்.
பாகுபலி யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தை மெகா பட்ஜெட்டில் 3டி மற்றும் 2டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளார் எஸ்.எஸ். ராஜமௌலி.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஆர்.ஆர்
ரத்தம் ரணம் ரௌத்தரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது.

உலகளவில் 800 கோடி வசூல்
தெலுங்கில் மட்டும் இப்படம் 200 கோடி வசூலையும், உலக அளவில் 800 கோடி வசூலையும் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் இதுவரையிலும் அதிக வசூலைப் பெற்ற படமாக பாகுபலி 2 படமாக 204 கோடியுடன் முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்த வசூலை ஆர்ஆர்ஆர் கடந்து 210 கோடியைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சபரிமலைக்கு
இந்நிலையில், மும்பை வந்திருந்த ராம்சரண் கருப்பு நிறத்தில் குர்தா அணிந்து கொண்டு கையில் காவித்துணியுடன் வெறும் காலுடன் காணப்பட்டார். அவர், ஐயப்பா சாமிக்கு மாலை போட்டுவிரதம் இருப்பதாகவும், ஆண்டுதோறும் 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வதை ராம்சரண் வழக்கமாக கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

RC15
ராம்சரண் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், கியாரா அத்வானி, ஜெயராம், அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார்.