டோலிவுட் ஸ்டார் வெங்கடேஷ் பிறந்தநாள்... ஒன்று திரண்டு வாழ்த்திய ரசிகர்கள்!
சென்னை : தெலுங்கு முன்னணி நடிகரான வெங்கடேஷ் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வெங்கடேஷ் டக்குபாதி 1960ம் ஆண்டு டிசம்பர் 13ந் தேதி சென்னையில் பிறந்தார்.
1986 ஆம் ஆண்டு வெளியான கலியுக பாண்டவுலு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார். முதல் திரைப்படத்திலேயே நந்தி விருதை வென்றார்.

70க்கும் மேற்பட்ட படங்களில்
முதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பலத் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என பெயர் எடுத்தார்.இவர் கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர்,7நந்தி விருதையும், 4 பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.

நாரப்பா
அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் நாரப்பா' அமேசான் ப்ரைமில் வெளியானது. வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு தனுஷின் நடிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தெலுங்கிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறது. தெலுங்கில் ஸ்ரீகாந்த் அடலா இயக்கத்தில் வெங்கடேஷ் பிரியாமணி முக்கியமான வேடங்களில் நடித்திருந்தனர். தனுஷின் கதாபாத்திரத்தில் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்து அனைவர் இடத்திலும் பாராட்டை பெற்றார்.

த்ரிஷ்யம் 2 ரீமேக்
வெங்கடேஷ் நடிப்பில் அடுத்ததாக த்ரிஷ்யம் 2 ரீமேக்கும் ரெடியாகி வருகிறது. அந்த படத்தின் ஷூட்டிங்கும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,இப்படம் ஒடிடி அல்லது தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

இன்று பிறந்தநாள்
இந்நிலையில் நடிகர் வெங்கடேஷ் இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள்,திரைப்பிரபலங்கள் ஒன்றிணைந்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் த்ரோ பேக் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











