கோடி கோடியா கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன்… அல்லு அர்ஜுன் அதிரடி முடிவு !
சென்னை : கோடி கோடியா கொடுத்தாலும் அப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று அல்லு அர்ஜூன் கூறியுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அல்லு அர்ஜுன்.
இவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா திரைப்படம் இந்தியா முழுவதும் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்து. அல்லு அர்ஜுனின் புகழை உலகம் அறிய செய்தது.

நடிக்க மாட்டேன்
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு விளம்பர படம் ஒன்றில் நடிக்க பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டது. ஆனால், அந்த விளம்பரம் புகையிலை விளம்பரம் என்பதால் அதில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டாராம். அந்த முன்னணி நிறுவனம் 6 கோடி ரூபாய் வரை சம்பளம் தருவதாக கூறிய பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் உடலுக்கு கேடு விளைவிக்கும் புகையிலை விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம் அல்லு அர்ஜுன்.

பாராட்டு
அந்த விளம்பரத்தில் நடித்தால், நானே எனது ரசிகர்களை நானே தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதுபோல் ஆகிவிடும். ஆதலால் அதில் நடிக்க மறுத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். ரசிகர்களின் நலன் கருதி நடிகர் அல்லு அர்ஜுன் செய்த இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மதுபான விளம்பரத்தில்
பல முன்னணி நிறுவனங்கள் முன்னணி நடிகர், நடிகைகளை வைத்தே விளம்பர படங்களை எடுத்து வருகின்றன. சமீபத்தில் கூட நிதி அகர்வால் ஆணுறை விளம்பரத்தில் நடித்தது சர்ச்சையானது. அதே போல சமந்தா, காஜல் அகர்வால், பிரியாங்காக சோப்ரா போன்ற நடிகைகள் மதுபான விளம்பரத்தில் நடித்தது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

விளம்பரங்களில் ஆர்வம்
தமிழ்நாட்டில் பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால், டோலிவுட், பாலிவுட் போன்ற திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் இன்றளவும் விளம்பரங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகின்றனர். தெலுங்கில் அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு போன்ற நடிகர்களும், இந்தியில் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக்கான், அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் போன்ற முன்னணி நடிகர்கள் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











