பிரபாஸுக்கு அறுவை சிகிச்சை… அய்யோ என்ன ஆச்சு பதறிய ரசிகர்கள் !
சென்னை : பாகுபலி நாயகன் பிரபாஸ் அறுவை சிகிச்சைக்காக ஸ்பெயின் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் அவரின் ரசிகர்கள் அய்யோ என்ன ஆச்சு என்று கேட்டு வருகின்றனர்.
Recommended Video
சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில், பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான இத்திரைப்படம், எதிர்பார்த்த வசூலைத்தராமல் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

சலார்
கே.ஜி.எஃப்' இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சலார். பிரபாஸ் நாயகனாக, ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்துவரும் இப்படத்தை கே.ஜி.எஃப் படத்தைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் பிரித்திவிராஜ் வில்லானாக நடித்துள்ளார்.

படப்பிடிப்பில் காயம்
இந்நிலையில், சலார் படப்பிடிப்பின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அது தற்போது வரை வலி குறையாமல் இருந்ததால், ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்து கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, அறுவை சிகிச்சைக்காக பிரபாஸ், ஸ்பெயின் சென்றுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின் பிரபாஸ் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால், சில மாதங்களுக்கு பிரபாசால் எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது.

மைனர் சர்ஜரி
இந்த தகவலை கேள்விப்பட்ட பிரபாஸின் தீவிர ரசிகர்கள் பிரபாசுக்கு என்ன ஆச்சு என்று கேட்டு வருகின்றனர். மைனர் அறுவை சிகிச்சை தான் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எதற்கான அறுவை சிகிச்சை என்று எந்த தகவலும் இல்லை.

ஆதிபுருஷ்
ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ், சைஃப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராமாயணத்தை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் ஓம் ராவத். இப்படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், பிரபாஸ் அஸ்வின் இயக்கும் Project K படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான தீபிகா படுகோன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications











