தளபதி 66 படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் மகள்... சரவெடி அப்டேட்!

சென்னை : தளபதி 66 திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி 66 படம் ஒரு குடும்ப சென்டிமென்ட் கதை என்று கூறப்படுகிறது.

அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்பகதையில் நடிக்க உள்ளார்.

பீஸ்ட்

பீஸ்ட்

நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தில் செல்வராகவன், சைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், லில்லிபட் பரூக்கி போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

தளபதி 66

தளபதி 66

பீஸ்ட் திரைப்படத்தை முடித்தக் கையோடு தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இது விஜய் நடிப்பில் உருவாகும் 66வது படமாகும். ஆகையால் இப்படத்திற்கு தளபதி 66 என்று தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பூஜை ஆயுத பூஜை அன்று நடத்த தில் ராஜு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தளபதி 66 படத்தின் பூஜையையும் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

மகேஷ் பாபுவின் மகள்

மகேஷ் பாபுவின் மகள்

இந்நிலையில் இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா, தளபதி விஜய்யின் மகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தெறி திரைப்படத்தில் மீனாவின் மகள் நைனிகா விஜய்யின் மகளாக நடித்திருந்தார் அதே போல இந்த படத்தில் சித்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன

Recommended Video

Vijay க்காக என்னை மாற்றிக்கொண்டேன் | S. A. Chandrasekhar | Naan kadavul illai | Filmibeat Tamil
டோலிவுட் சூப்பர் ஸ்டார

டோலிவுட் சூப்பர் ஸ்டார

டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் மகேஷ் பாபு. இவர் முன்னாள் ஹீரோ கிருஷ்ணாவின் மகன் ஆவார். தன்னுடைய தேர்ந்தெடுத்த படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். நடிப்பை தாண்டி பல்வேறு சமூக பணிகளிலும் மகேஷ்பாபு ஈடுபட்டு வருகிறார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களைத்தான் விஜய் தமிழில் நடித்து ஹிட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X