Tom Cruise: ஆஸ்கர் விருது வென்ற டாம் க்ரூஸ்.. அடேங்கப்பா சினிமா பற்றி என்னம்மா பேசிட்டாரு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: நவம்பர் 16 அன்று நடைபெற்ற கவர்னர்ஸ் விருதுகள் விழாவில், நடிகர் டாம் குரூஸ் கௌரவ ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார். தனது 40 ஆண்டுகால திரையுலகப் பயணத்தில் இது ஒரு முக்கிய தருணம் என கையில் ஆஸ்கர் விருதுடன் டாம் க்ரூஸ் பேசியது உலகளவில் உள்ள அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

அகாடமியின் உயரிய விருதான கௌரவ ஆஸ்கரை பெற்றபோது, சினிமா தன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தையும், அது சென்றடைந்த சமூகங்களையும் பற்றி அவர் மனம் திறந்து பேசினார்.

Tom Cruise receives Honorary Oscar Award at Governors Awards
Photo Credit:

வரும் அக்டோபர் 2026-ல் வெளியாக உள்ள பெயரிடப்படாத படத்திற்காக டாம் குரூஸுடன் தற்போது பணிபுரிந்து வரும் இயக்குநர் அலெஜான்ட்ரோ ஜி. இனர்ரிட்டு இந்த விருதை அவருக்கு வழங்கினார். இந்தத் தருணம் அவர்களின் ஒத்துழைப்பிற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்த்தது.

டாம் க்ரூஸுக்கு ஆஸ்கர்: ஜாக்கி சான் உள்ளிட்ட நடிகர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் என்கிற அடிப்படையில் கெளரவ ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த முறை அப்படியொரு அங்கீகாரத்தை நடிகர் டாம் க்ரூஸ் பெற்றுள்ளார். அமெரிக்க நாட்காட்டிப்படி நவம்பர் 16 அன்று நடைபெற்ற கவர்னர்ஸ் விருதுகள் விழாவில், நடிகர் டாம் குரூஸ் கௌரவ ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார்.

டாம் க்ரூஸின் சூப்பரான பேச்சு: விருதை ஏற்றுக்கொண்டு பேசிய டாம் குரூஸ், திரைப்படங்கள் உலகளவில் ஏற்படுத்தும் பிணைப்பை கொண்டாடினார். மேலும், ஒரு கதையைத் திரைக்குக் கொண்டுவர உழைக்கும் பலரையும் பாராட்டினார்.

"சினிமா என்னை உலகம் முழுவதும் அழைத்துச் செல்கிறது. இது வேறுபாடுகளை மதிக்கவும், புரிந்து கொள்ளவும் உதவுகிறது. நாம் எவ்வளவு ஒத்தவர்கள் என்பதையும், நம் பகிரப்பட்ட மனிதநேயத்தையும் இது காட்டுகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

சினிமா ஒரு மாபெரும் சக்தி: "நாம் எங்கிருந்து வந்தாலும், திரையரங்கில் நாம் ஒன்றாக சிரிக்கிறோம், உணருகிறோம், நம்பிக்கைகொள்கிறோம். இதுதான் இந்தக் கலை வடிவத்தின் சக்தி. அதனால்தான் இது எனக்கு முக்கியமானது. படங்களை உருவாக்குவது என்பது நான் செய்யும் வேலை மட்டுமல்ல, அதுவே நான்" என்று அவர் மேலும் கூறினார்.

சினிமா மீதான தனது காதலின் ஆரம்பத்தையும் குரூஸ் நினைவு கூர்ந்தார். "எனது சிறு வயதிலேயே சினிமா மீதான எனது காதல் தொடங்கியது, என்னால் நினைவில் இருக்கும்வரை" என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

சினிமா எனக்கு கற்றுக்கொடுத்தது அதிகம்: "அப்போது நான் ஒரு சிறிய இருண்ட திரையரங்கில் இருந்தேன். அந்த ஒளிக் கற்றை அறையைக் கடந்து, திரையில் பிரகாசமாக விரிவடைந்தது. அந்த தருணத்தில், உலகம் எனக்குத் தெரிந்ததை விட மிகப் பெரியதாக விரிவடைந்தது. முழு கலாச்சாரங்களும், வாழ்க்கைகளும், நிலப்பரப்புகளும் என் முன் விரிந்தன" என்று அவர் விவரித்தார்.

"அது ஒரு சாகசத்திற்கான, அறிவிற்கான, மனிதநேயத்தைப் புரிந்துகொள்வதற்கான, கதாபாத்திரங்களை உருவாக்கும், கதைகளைச் சொல்லும், உலகைப் பார்க்கும் பசியைத் தூண்டியது. அது என் கண்களைத் திறந்தது. என் வாழ்க்கையின் எல்லைகளுக்கு அப்பால் ஒரு வாய்ப்பைத் தந்தது. அந்த ஒளிக் கற்றை உலகைத் திறக்கும் ஒரு விருப்பத்தைத் தூண்டியது, நான் அப்போதிருந்து அதைப் பின்பற்றி வருகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

விருது வென்ற பிரபலங்கள்: இந்த நிகழ்வில் டாம் குரூஸின் ஆஸ்கர் பயணமும் நினைவுபடுத்தப்பட்டது. 'பார்ன் ஆன் தி ஃபோர்த் ஆஃப் ஜூலை' மற்றும் 'ஜெர்ரி மாகுவேர்' படங்களுக்காக சிறந்த நடிகர் பிரிவிலும், 'மாக்னோலியா' படத்திற்காக சிறந்த துணை நடிகர் பிரிவிலும், 'டாப் கன்: மேவரிக்' பட தயாரிப்பாளராக சிறந்த படம் பிரிவிலும் என மொத்தம் நான்கு முறை ஆஸ்கர் நாமினேஷன்களை பெற்றுள்ளார்.

விழாவில் முன்னதாக மற்ற கௌரவிக்கப்பட்டவர்கள், நடன அமைப்பாளர் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் பங்களித்த டெபி ஆலனுக்கு சின்சியா எரிவோ கௌரவ ஆஸ்கரை வழங்கினார்.

தயாரிப்பு வடிவமைப்பாளர் வின் தாமஸ் தனது விரிவான பணிக்காக அங்கீகாரம் பெற்றார். ஜான் ஹெர்ஷோல்ட் மனிதாபிமான விருது டோலி பார்ட்டனுக்கு வழங்கப்பட்டது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக பங்கேற்கவில்லை.

கவர்னர்ஸ் விருதுகள் விழாவில், ஜெனிஃபர் லாரன்ஸ், மைக்கேல் பி. ஜோர்டான், சிட்னி ஸ்வீனி, லியோனார்டோ டிகாப்ரியோ, டுவைன் ஜான்சன் மற்றும் எம்மா ஸ்டோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் சிவப்பு கம்பளத்தில் தோன்றினர். விருதுகள் சீசன் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X