இந்த ஆண்டு 3வது இடத்துக்கு சென்ற அஜித்.. முதலிடத்தில் யாரு தெரியுமா? டாப் 5 ஹீரோக்கள் லிஸ்ட் இதோ!
சென்னை: 2023ம் ஆண்டு பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதமே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் மோதின. தனித்தனியாக வெளியாகி இருந்தால் இரண்டு படங்களின் வசூல் மேலும், அதிகரித்து இருக்கும்.
அதன் பின்னர் தனுஷின் வாத்தி, உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன், சிவகார்த்திகேயனின் மாவீரன், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2, ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் மீண்டும் விஜய் நடிப்பில் வெளியான லியோ என எல்லாமே வசூல் வேட்டை நடத்தின.
இளம் நடிகர்களை விட சீனியர் நடிகர்கள் இந்த வயதிலும் தொடர்ந்து ரசிகர்களை என்டர்டெயின் செய்ய கடுமையான உழைப்பை கொட்டி வருகின்றனர். இதில், டாப் 5 நடிகர்கள் குறித்த பட்டியலை இங்கே காணலாம் வாங்க..

5. சிவகார்த்திகேயன் - மாவீரன்: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் செம ஸ்லிம்மான லுக்குடன் வித்தியாசமான ஃபேண்டஸி கதையுடன் சமூக பிரச்சனையும் பேசிய மாவீரன் திரைப்படம் காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக ஏகப்பட்ட ரசிகர்களை என்டர்டெயின் செய்தது. சிவகார்த்திகேயனுக்கு மேலும், பல ரசிகர்களை இந்த படம் கொண்டு வந்து சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் பொங்கலுக்கு அயலான் படம் மற்றும் அடுத்த ஆண்டு கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் என மாஸ் காட்ட காத்திருக்கிறார்.
4. தனுஷ் - வாத்தி: இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வாத்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. தெலுங்கு இயக்குநர்கள் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில், தனுஷுக்கு ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் மற்றும் கருத்துள்ள படத்தைக் கொடுத்து காப்பாற்றியிருந்தார் வெங்கி அட்லூரி. இந்த ஆண்டு இறுதியில் கேப்டன் மில்லர் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அந்த படம் வெளியாக போகிறது.
3. அஜித் - துணிவு: வலிமை படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், எச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடித்து இந்த ஆண்டு வெளியான துணிவு திரைப்படம் 200 கோடி வசூலை ஈட்டியது. விஜய்யின் வாரிசு படத்துக்கு கடும் போட்டியாக அமைந்தது. நடிகர் அஜித்தின் லுக் இந்த படத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது. விடாமுயற்சி இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என தெரிகிறது. துணிவு படத்தை விட விடாமுயற்சி படம் இப்பவே 250 கோடி வசூல் ஈட்டியிருப்பதாக கூறப்படும் நிலையில், படம் வெளியானால் அஜித்துக்கு ஒரு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் படமாக இருக்கும் என்றும் ஆனால், சோலோவாக வெளியானால் தான் அது சாத்தியம் என்றும் கூறுகின்றனர்.
2. விஜய் - லியோ: இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் லியோ என இரு படங்கள் வெளியானாலும் ரசிகர்களுக்கு முழு திருப்தியை அந்த இரு படங்களும் கொடுக்கவே இல்லை. நடிகர் விஜய்யின் ஸ்டார்டம் காரணமாகவே வாரிசு 300 கோடி வசூலையும் லியோ படம் 600 கோடி வசூலையும் ஈட்டியது. லியோ படத்தின் செகண்ட் ஹாஃப் சிறப்பாக அமைந்திருந்தால் இந்த ஆண்டின் நம்பர் ஒன் நடிகராகவே விஜய் மாறியிருப்பார்.
1. ரஜினிகாந்த் - ஜெயிலர்: பீஸ்ட் படத்தில் பட்ட அவமானங்களில் இருந்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இயக்குநர் நெல்சனுக்கு, அதே போல தர்பார் மற்றும் அண்ணாத்த படங்கள் தோல்வியில் இருந்து மீள வேண்டும், கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வசூலுக்கு பதில் சொல்ல வேண்டும் என பல பிரஷர்களுக்கு மத்தியில் பக்கா கமர்ஷியல் மாஸ் படமாக வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சிவராஜ்குமார், மோகன்லால் என முன்னனி நடிகர்களின் கேமியோக்கள் படத்திற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய கூஸ்பம்ப்ஸ் தருணங்களாக தியேட்டரில் அலப்பறையை கிளப்பின. 72 வயதிலும் தனது ரசிகர்களுக்காக உழைக்கும் நடிகர் ரஜினிகாந்த் தான் இந்த ஆண்டின் நம்பர் ஒன் ஃபேவரைட் ஹீரோ என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.


Click it and Unblock the Notifications











