பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் டோவினோ தாமஸின் ARM.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?
சென்னை: இந்தியா முழுவதும் பிரபலமடைந்திருக்கும் நடிகர் டோவினோ தாமஸ் இப்போது ARM (Ajayante Randam Moshanam) என்ற படத்தில் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு படமானது வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் வசூல் ரீதியாகவும் படம் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது.
மின்னல் முரளி" படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்த டோவினோ தாமஸ், அஜயந்தே ரண்டம் மோஷனம் (ARM) படத்தின் மூலம் மீண்டும் ஹிட் கொடுத்துள்ளார். இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் வரவேற்பைப் பெற்றது. இந்த ஃபேண்டஸி த்ரில்லர் படம் டோவினோ தாமஸ் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தியுள்ளது. ARM படத்தில் டோவினோ தாமஸ் குஞ்சிக்கெழு, மணியன் மற்றும் அஜயன் ஆகிய மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

நட்சத்திர பட்டாளம்: . "கான்", "சித்தா" போன்ற படங்களின் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற திபு நைனன் தாமஸ் "ARM" படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்கள் மூலம் கவனம் பெற்ற கிருத்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
மேலும் பாசில் ஜோசப், ஜெகதீஷ், ஹரிஷ் உத்தமன், ஹரிஷ் பெராடி, கபீர் சிங், பிரமோத் ஷெட்டி மற்றும் ரோகினி ஆகியோரும் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் திரைக்கதையை சுஜித் நம்பியார் எழுதியுள்ளார். மலையாள திரையுலகில் தொடங்கி தற்போது பாலிவுட்டிற்கு வந்துள்ள ஜோமோன் டி.ஜான் "ARM" படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், மேலும் படத்தொகுப்பை ஷமீர் முகமது செய்துள்ளார்.

படம் ரிலீஸ்: படமானது சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான படத்துக்கு ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்போடு சென்றனர். படம் பார்த்தவர்கள் தங்களது எதிர்பார்ப்பை நல்லபடியாக படம் பூர்த்தி செய்திருப்பதாகவும்; கதைக்களமும் சரி டோவினோவின் நடிப்பும் சரி புதுமையாகவும், திருப்திப்படுத்தும் வகையிலும் இருப்பதாகவும் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்தனர்.
பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் வெளியாகி கடந்த 4 நாட்களில் உலகளவில் 35 கோடி வசூலைக் கடந்துள்ளது. வெளியான அனைத்து மொழிகளிலும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்களை பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் லட்சக்கணக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதால் வசூல் இன்னமும் அதிகரிக்கும் என்று


Click it and Unblock the Notifications











