ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து.. வயிற்றில் ரத்தக் கசிவு.. நடிகர் டொவினோ தாமஸ் ஐசியூவில் அட்மிட்
கொச்சி: மாரி 2 படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்த பிரபல மலையாள நடிகர், டொவினோ தாமஸ் மருத்துவமனையில் அனுமதி.
பிரபுவின்டே மக்கள் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் டொவினோ தாமஸ்.
'Kala' எனும் மலையாளப் படத்தின் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளம் ஹீரோ
மாயநதி, வைரஸ், லூசிபர், உயரே, கல்கி, அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டு, ஃபாரன்சிக், உள்ளிட்ட மலையாள படங்களில் நாயகனாக நடித்துள்ள டொவினோ தாமஸ், தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மின்னல் முரளி, ‘Kala' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

வயிற்றில் காயம்
இந்நிலையில், இயக்குநர் ரோஹித் இயக்கத்தில் உருவாகி வரும் Kala படத்தின் ஸ்டன்ட் காட்சி ஒன்றில் நடிக்கும் போது, நடிகர் டொவினோ தாமஸுக்கு வயிற்றில் பலமாக அடிபட்டு இருக்கிறது. வெளியே காயம் ஏதும் இல்லாத நிலையிலும், அவர் துடித்த துடிப்பை பார்த்த படக்குழு அவரை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர்.

ரத்தக் கசிவு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் டொவினோ தாமஸுக்கு வயிற்றுப் பகுதியின் உள்ளே ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் உடனடியாக ஐசியூவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டொவினோ தாமஸ் ஐசியூவில் உள்ள செய்தி மலையாள திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரசிகர்கள் பிரார்த்தனை
நடிகர் டொவினோ தாமஸுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அவர் சீக்கிரம் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். நடிகர் டொவினோ தாமஸுக்கு எதுவும் நேராது அவர் விரைவில் ரசிகர்களை சந்திப்பார் என்றும் சில பிரபலங்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

பாடி பில்டிங்
லாக்டவுன் நேரத்தில் தனது தந்தையுடன் உடற்பயிற்சி செய்து வேற லெவல் கட்டுமஸ்த்தான தோற்றத்திற்கு மாறிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார் டொவினோ தாமஸ். தந்தைக்கு பேஸ்மேக்கர் வைக்கப்பட்டு இருந்தாலும், அவர் எனக்கு மேல வொர்க்கவுட் செய்கிறார். அவர் தான் என் குரு என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











