Toxic: காருக்குள்ள கசமுசா.. பிறந்தநாள் அதுவுமா பிறந்தமேனியா வந்துடுவாரோ யஷ்ஷுன்னு பயந்துட்டோம்!

பெங்களூரு: கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் வெகுவாக பிரபலமடைந்திருக்கும் நடிகர் யஷ் இப்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்திருக்கிறார். இதில் நயன்தாரா, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பெரிய எதிர்பார்ப்பை படம் சந்தித்திருக்கிறது. இந்நிலையில் இன்று யஷ்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் டாக்சிக் படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார்கள்.

கன்னட திரையுலகத்தில் கடந்த பல வருடங்களாக இருப்பவர் யஷ். இங்கு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான களவாணி, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட படங்களை எல்லாம் அந்த மொழியில் ரீமேக் செய்து வெற்றி கிடைத்துவிடாதா என்று ஏங்கிக்கொண்டிருந்தார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இங்கு எப்படி சியான் விக்ரம் சேது வெற்றியை நீண்ட காலம் கழித்து பெற்றாரோ அதேபோல்தான் கன்னட மொழியில் யஷ்ஷும் இருந்தார்.

பான் இந்தியா ஹீரோ: இப்படிப்பட்ட சூழலில்தான் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஜிஎஃப் படத்தில் நடித்தார். கோலார் தங்க வயலில் அடிமைப்படுத்தப்பட்டவர்களை பற்றி எடுக்கப்பட்ட அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முக்கியமாக அதில் இடம்பெற்றிருந்த ஆக்‌ஷன் காட்சிகள், சென்ட்டிமென்ட் காட்சிகள் எல்லாம் கன்னட மொழி மட்டுமின்றி மற்ற மொழி ரசிகர்களுக்கும் நன்றாக கனெக்ட் ஆனதால் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது.

Toxic Teaser Release Yash Returns in Style After KGF Blockbusters Here are details
Photo Credit:

இரண்டாவது பாகமும் ஹிட்: கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து அதன் இரண்டாவது பாகம் உருவானது. பொதுவாக செகன்ட் பார்ட் படங்களுக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இருக்காது என்றே அனைத்து மொழி திரைத்துறையிலும் சென்ட்டிமென்ட் இருந்தது. அதனை சுக்கு நூறாக உடைத்து இரண்டாவது பாகம் எடுத்தாலும் மெகா ஹிட்டடிக்கும்; அதற்கு படத்தை ஒழுங்காக எடுக்க வேண்டும் என உணர்த்தியது கேஜிஎஃப் 2. அதற்கு போட்டியாக வெளியாகி பீஸ்ட் படமே தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

டாக்சிக் யஷ்: கேஜிஎஃப் 2வுக்கு பிறகு கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்திருக்கிறார். இதில் நயன்தாரா, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்புதான் அவர்களது கேரக்டர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நயன்தாரா கங்கா என்ற கேரக்டரையும், ருக்மிணி வசந்த் மெல்லிசா என்ற கேரக்டரையும் ஏற்றிருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் யஷ் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

வெளியான டீசர்: அதனையொட்டி படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டிருக்கிறது. அந்த டீசரில் விலையுயர்ந்த காரில் வரும் யஷ்; ஒரு பெண்ணுடன் கசாமுசா செய்துகொண்டே; எதிரிகளை வீழ்த்தும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. படத்தில் அவர் செம ஸ்டைலிஷாக இருப்பார் என்பது டீசரை பார்க்கையில் தெரிகிறது. கண்டிப்பாக இந்தப் படமும் கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்கள் மாதிரியே மெகா ப்ளாக் பஸ்டர் என்ற நம்பிக்கையை யஷ்ஷின் ரசிகர்களுக்கு இந்த டீசர் கொடுத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X