'குறளை' கூட்டி வரும் டி.ஆர்

ஒரு காலத்தில் கலக்கியவர் ராஜேந்தர். இப்போது முன்பு போல படங்களை எடுத்துக் குவிப்பதில்லை. மாறாக, டிவி நிகழ்ச்சியிலும், அவ்வப்போது படங்களிலும் தலை காட்டி வருகிறார். அரசியலிலும் டி.ஆர். இருக்கிறார்.
கடைசியாக வீராசாமி என்ற படத்தைக் கொடுத்த ராஜேந்தர் சின்ன இடைவெளிக்குப் பின் மீண்டும் திரைக்கு வருகிறார். இம்முறை 'அட் ஏ டைம் அட்டாக்' ஆக 2 படங்களை ஒரே நேரத்தில் இயக்கவுள்ளார்.
ஒரு படம் கருப்பண்ணனின் காதலி. இன்னொன்று கல்லூரி நாட்கள். காதலியில் நாயகன் சிம்புவின் தமையன் குறள். நாட்களில் நாயகன் சாட்சாத் ராஜேந்தரேதான்.
குறள் நடிக்கும் படத்தை பிரமீட் சாய்மீரா நிறுவனம் தயாரிக்கிறது. 2வது படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தற்போது சிம்புவை வைத்து சிலம்பாட்டத்தை எடுத்து வருகிறது என்பது நினைவிருக்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications