ஹீரோ .. ஹீரோ ..
டி.ராஜேந்தர் தனது வீராசாமி படத்தை படு விறுவிறுப்பாக உருவாக்கி வருகிறார். அத்தோடு அடுத்த படத்தையும் திட்டமிட்டுவிட்டாராம்.
வீராசாமி என தனது படத்திற்குப் பெயர் வைத்துள்ள டி.ஆர். அடுத்த படத்திற்கு வேலுச்சாமி என பெயர் சூட்டியுள்ளாராம்.வீராசாமி படத்தை விட படு விறுவிறுப்பாக வேலுச்சாமி இருக்குமாம்.
அதை விட அதிர்ச்சிகரமான பிளஸ் புரட்சிகரமான விஷயம் இருக்கிறது. இந்தப் படத்தில் இதுவரை பார்த்திராத டி.ஆரைரசிகர்கள் பார்க்கப் போகிறார்களாம். அதாவது தாடி இல்லாமல் தோன்றப் போகிறாராம் டி.ஆர். (அய்யய்யோ...அய்யய்யோ...)
தாடியில்லாமல், படு வித்தியாசமான கெட்டப்புடன் தோன்றி ரசிகர்களை ஒரு கலக்கு கலக்க திட்டமிட்டுள்ளாராம் டி.ஆர்.
தாடி இருந்தா நீ(ங்க) டி ஆரு...
தாடி இல்லாட்டி நீ(ங்க) யாரு?...
ஏ டன்டனக்கா, ஏ டனக்கணக்ககா !


Click it and Unblock the Notifications











