சூர்யா பிறந்த நாள்.. இன்னும் நாள் இருக்கே.. இப்போதே டிரெண்டான ஹாஸ்டேக் !

சென்னை : நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் வரும் ஜீலை 23 கொண்டாடப்படுகிறது. இதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் ஹாஸ்டேக்கை டிரெண்ட்டாக்கி உள்ளனர்.

Recommended Video

Rambha Indran Wedding Anniversary | 'No Relatives N Friends' | Lock down diaries

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் மட்டும் தான் நடித்து இருந்தாலும் இவருக்கு தென்னிந்தியா முழுக்க தீவிரமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது சூர்யா ரசிகர்கள் இணைந்து பிறந்தநாளுக்கு இன்னும் 100நாட்கள் இருப்பதை ட்விட்டரில் டிரெண்டாக்கி உள்ளனர்.

Trendy hashtag on Twitter regarding Suryas birthday

'பினோம் சூர்யா பர்ட்டே இன் 100 டேஸ்' என்ற ஹாஸ்டேக் தற்போது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் பலர் இப்போதிலிருந்தே சூர்யா பிறந்தநாளுக்கு சிறப்பு வாழ்த்துகளை கூறி இந்த ஹாஸ்டேக்குடன் பதிவை போட்டுள்ளனர் .

மேலும் பல சூர்யா ரசிகர்கள் மீம்களின் வாயிலாக சூர்யாவின் சிறப்பு, நடிப்பு திறமை, சூர்யா படங்களின் வெற்றி என பலவற்றை குறிப்பிட்டு மீம்களின் வாயிலாக கூறி பதிவேற்றி வருகின்றனர். ட்விட்டரை தவிர்த்து மற்ற சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் சூர்யா பிறந்தநாளுக்கு சரியாக நூறு நாட்கள் இருக்கிறது என்ற ஹாஸ்டேக்கையும் பதிவையும் காண முடிகிறது .

Trendy hashtag on Twitter regarding Suryas birthday

ரசிகர்களை தாண்டி சில முன்னணி தொலைகாட்சி நிறுவனங்களும் ஹாஸ்டேக்குடன் சூர்யா பிறந்தநாளுக்கு இன்னும் 100நாட்கள் இருக்கிறது என்பதை குறிப்பிட்டு அட்வான்ஸ் வாழ்த்துகளை கூறியுள்ளனர். முன்னணி தொலைகாட்சியான ஜெயா தொலைகாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறே செய்துள்ளது. மேலும் ஜெயா தொலைகாட்சி உங்களுக்கு பிடித்த சூர்யா படங்களையும் பகிருங்கள் என்று கூறி சூர்யா ரசிகர்களை உற்சாகபடுத்தியுள்ளது.

பல ரசிகர்களும் இணையம் வாயிலாக சூர்யாவின் சூரரைப்போற்று படத்திற்காக வெறித்தனமாக காத்திருப்பதாக கூறி வருகின்றனர். ரசிகர்கள் பலரும் கொரன்டைன் முடிந்ததும் படத்தின் வெளியீட்டை பற்றிய அறிவிப்பை உடனே அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Trendy hashtag on Twitter regarding Suryas birthday

ரசிகர்கள் ட்விட்டரில் ஹாஸ்டேக்கை உருவாக்கியுள்ளதை போல மற்ற இணையத்தை அதிகமாக பயன்படுத்தும் ரசிகர்கள் இந்த நிகழ்வை கொண்டாட காமன் டீபி ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். இந்த போஸ்டரும் ட்விட்டர் உட்பட பல சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

More from Filmibeat

Read more about: surya hashtag சூர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X