»   »  விஷாலுடன் இணையும் த்ரிஷா

விஷாலுடன் இணையும் த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பீமாவில் விக்ரமுடன் ஜோடி கட்டி வரும் த்ரிஷா, அடுத்து விஷாலுடன் சத்யம் படத்தில் இணைகிறார்.

தமிழிலும், தெலுங்கிலுமாக இரட்டை சவாரி செய்து வரும் த்ரிஷா, தற்போது விக்ரமுடன் பீமா படத்தில் நடித்துவருகிறார். அப்படியே சைடில் அஜீத்துடன் கிரீடம் படத்திலும் திறமை காட்டி வருகிறார்.

இதைத் தொடர்ந்து தெலுங்கில் அவர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக டான் படத்தில் நடிப்பார் எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டான் படத்திலிருந்து அவர் விலகி விட்டார். கால்ஷீட் ஒதுக்க முடியவில்லைஎன்பது அவர் கூறிய காரணம்.

ஆனால் வெற்றிக் குதிரை விஷாலுடன் நடிக்க வந்த வாய்ப்பால்தான் நாகார்ஜுனாவுடன் நடிக்கும் வாய்ப்பைஅவர் நிராகரித்து விட்டார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

தாமிரபரணிக்குப் பின் விஷால், அடுத்து புதுமுக இயக்குநர் ராஜசேக>ன் இயக்கத்தில் சத்யம் என்ற படத்தில்நடிக்கவுள்ளார். இதில் நடிக்க த்ரிஷாவை அணுகியுள்ளனர்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காகத்தான் தெலுங்குப் படத்தை லூஸில் விட்டு விட்டாராம் த்ரி.

இப்படத்தில் உதவி போலீஸ் கமிஷனராக நடிக்கவுள்ளார் விஷால். இதற்காக தலைமுடியை ஒட்ட வெட்டிபோலீஸ் அதிகாரி லுக்குக்கு மாறவுள்ளார். இதுதவிர நிஜமான சில போலீஸ் அதிகாரி>களின் நடை, உடைபாவணைகளை அப்படியே அப்சர்வ் செய்து அதை தனது கேரக்டரில் புகுத்தவுள்ளாராம்.

இன்னொரு காக்க காக்க?

Read more about: trisha to pair with vishal

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil