»   »  திரிஷாவிடம் சிம்பு சரண்!

திரிஷாவிடம் சிம்பு சரண்!

Subscribe to Oneindia Tamil

அத்தனை ஹீரோயின்களும் சொல்லி வைத்தது போல நடிக்க முடியாது என்று கூறி விட்டதால் வெறுத்துப் போன சிம்பு, இப்போது திரிஷாவிடம்போய் கால்ஷீட் கேட்டு நிற்கிறாராம்.

ஒரு நேரத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஏற்பட்ட அதே கதி இப்போது சிம்புவுக்கும் வந்துள்ளது. லொள்ளு பிளஸ் கில்மா நாயகனாக வலம் வந்தவர்சூர்யா. படு வேகமாக முன்னுக்கு வந்த அவருக்கு அன்பே ஆருயிரே படத்துக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது.

கூட நடித்த நடிகைகளுடன் பலமாக கிசுகிசுக்கப்பட்டதாலும், அவரே அந்த கிசுகிசுக்களைப் பரப்புவதாக கூறப்பட்டாலும், இன்ன பிறஇம்சைகளாலும், அவருடன் ஜோடி சேர நடிகைகள் மறுக்க ஆரம்பித்தனர்.

திருமகன் படத்திற்கு ஒரு ஆள் கூட கிடைக்காமல் ரொம்பவே நொந்து போயிருந்தார் சூர்யா. ஒரு வழியாக ஆள் கிடைத்து, தேனி பக்கம் கும்பலாகப்போய் படப்பிடிப்பை ஆரம்பித்தனர்.

அன்று எஸ்.ஜே.சூர்யா, இன்று சிம்பு. மன்மதன் ஓடினாலும் ஓடியது, மனுஷன் பண்ண ஆரம்பித்த வம்புக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.ஆனால் வல்லவன் படம் வந்த பிறகு சிம்புவின் டோட்டல் இமேஜ் பனால் ஆகி விட்டது.

நயனதாரா விவகாரம், அவரை விரட்டி விரட்டி பேச முயன்றது, உம்மா கொடுத்த படங்களை இணையதளங்களில் உலவ விட்டது என அடுத்தடுத்துசிம்புவுக்கு வந்து சேர்ந்த ஆப்புகள் ஏராளம்.

இத்தனையும் சேர்ந்து இப்போது சிம்புவை டென்ஷன் படுத்த ஆரம்பித்துள்ளதாம். தருண்கோபி இயக்கத்தில், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில்சிம்பு நடிக்கும் புதுப் படத்திற்கு ஹீரோயின் கிடைக்கவில்லையாம்.

படத்திற்கு இப்போதைக்கு காளை என்று பெயர் வைத்துள்ளனராம். இதில் தனக்கு ஜோடியாக நடிக்குமாறு தனிப்பட்ட முறையில் அசின், ஷ்ரியா,கோபிகா, பாவனா, ரீமா சென் என பலரையும் அணுகியுள்ளார் சிம்பு. ஆனால் அத்தனை பேரும் அம்மாடி, ஆத்தாடிஎன்று அலறியபடி ஓடிப்போய் விட்டார்களாம். எல்லாவற்றுக்கும் நயனதாரா எபிசோட்தான் காரணமம்.

கடந்த வாரம் ஷ்ரியா ஸாரி சொன்னாராம். கோபிகா, பதிலே கொடுக்காமல் எஸ்கேப் ஆகி விட்டாராம். பாவானவும் மண்டையை வேகமாக ஆட்டிவிட்டாராம். அத்தோடு நில்லாமல் சிம்புவை ரொம்பவே விமர்சித்து மலையாளப் பத்திரிக்கை ஒன்றில் பேட்டியும் கொடுத்துள்ளார்.

அசின் கதையைக் கேட்கவே வேண்டாம். அவரோட ரேஞ்ச் விஜய், அஜீத், சூர்யா என்கிற லெவலில்தான் இருக்கிறது. அவர்களுக்குக் கீழ் உள்ளஹீரோக்களைப் பற்றி அவர் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லையாம்.

சிம்பு அணுகியபோது 2008 வரை நோ கால்ஷீட் மா என்று கூறி ஸாரி சொல்லி அனுப்பி விட்டாராம். ஆனால் பாப்பா கையில் ரெண்டே ரெண்டுதமிழ்ப் படமும், ஒரே ஒரு தெலுங்குப் படம் மட்டும்தான் இருக்கிறதாம்!)

இப்படி எல்லா ஹீரோயின்களும் அத்து விட்டு விட்டதால், யாரைப் பார்த்து என்ன பேசலாம் என்று குழம்பிப் போயிருந்த சிம்புவின் கண்களில்திரிஷா தெரிந்துள்ளார். முன்னால் தோஸ்த் ஆச்சே, முடியாதுன்னு சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கையில் இப்போது அவரை அணுகியுள்ளாராம்சிம்பு.

திரிஷாவும், சிம்புவும் ஒண்ணாப் படிச்ச தோஸ்துகள் என்பது தெரியும்தானே? இருவரும் இணைந்து முன்பே அலை என்ற படத்தில் நடித்துள்ளனர்.அந்த சமயத்தில் திரிஷாவும், சிம்புவும் காதலிப்பதாக கூட செய்திகள் கிளம்பின (யார் பரப்பியது என்று சத்தியமாக எங்களுக்குத் தெரியாதுங்க!)

இந்த வதந்திகளுக்குப் பிறகு சிம்புவின் சங்காத்தமே வேண்டாம் என்று விலகியிருந்தார் திரிஷா. அதற்குப் பிறகு அவர் போன உசரம்தான்உங்களுக்கேத் தெரியுமே!

மீண்டும் தன்னை நாடி வந்துள்ள சிம்புவுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம் திரிஷா.மீண்டும் அலை அடிக்குமா?

Read more about: simbhu begs thrisha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil