திரிஷா அழகா? நயன்தாரா அழகா?.. விஜய் சேதுபதி என்ன சொல்லியிருப்பார்னு நினைக்கறீங்க?!

திரிஷா நயன்தாரா இருவரில் யார் அழகானவர் என்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை: பாடல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, திரிஷா நயன்தாரா இந்த இரண்டுபேரில் யார் அழகு என்ற கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்துள்ளார்.

விஜய் சேதுபதி இப்போது திரிஷாவுடன் 96 எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சி.பிரேம்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.

Trisha or Nayanthara who is beautiful? Says Vijay Sethupathi

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இளமை பொங்கும் அழகில் திரிஷாவை பார்த்த ரசிகர்கள் யாருடா திரிஷாவுக்கு வயசாகிடுச்சின்னு சொன்னது? தலைவி எப்பவுமே தலைவிதான் என்று ஆரத்தி எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நிலையில், நடன இயக்குனர் ராபட் கதாநாயகனாக நடிக்கும் ஒண்டிக்கு ஒண்டி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நயன்தாரா மற்றும் திரிஷாவுடன் நடித்துள்ள விஜய் சேதுபதியிடம், திரிஷா அழகா அல்லது நயன்தாரா அழகா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சாமர்த்தியமாக பதிலளித்த விஜய் சேதுபதி, எல்லாப் பெண்களுமே அழகானவர்கள். ஒருவருடன் ஒருவரை அழகை வைத்து ஒப்பிட முடியாது என்றார்.

உங்களுக்கு திரையில் மிகப்பொருத்தமான கதாநாயகி யார் என்று கேட்கப்பட்டதற்கு, அப்படி யாரையும் குறிப்பிட்டு சொல்லமுடியாது. ஏற்கப்படும் கதாப்பாத்திரத்தையும், அதை எப்படி சிறப்பாக செய்கிறார்கள் என்பதை பொறுத்தே அது அமைகிறது என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X