த்ரிஷாவுடன் என்ன தான் உறவு: பிரபல இயக்குனரிடம் சொன்ன ராணா

By Siva

மும்பை: த்ரிஷாவுடனான உறவு குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் ராணா.

பாகுபலி படத்தில் வேலை செய்த பிரபாஸ், ராணா, இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி ஆகியோர் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியை நடத்திய பாலிவுட் இயக்குனர் கரண் கோஹார் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தார்கள்.

ராணா

ராணா

சிங்கிளாக உள்ளீர்களா என்று கரண் பிரபாஸ் மற்றும் ராணா ஆகியோரை பார்த்து கேட்டார். அதற்கு இருவருமே ஆமாம் என்றார்கள். சிங்கிளாக இருப்பது தான் சிறந்தது என்றார் ராணா. அப்படி என்றால் நீங்கள் நடிகை த்ரிஷாவை காதலிக்கவில்லையா என்று கரண் ராணாவை பார்த்து கேள்வி எழுப்பினார்.

காதல்

காதல்

த்ரிஷாவை நான் காதலிக்கவே இல்லை. 10 ஆண்டுகளாக அவர் என் நல்ல நண்பர் மட்டுமே. ஆனால் எங்களுக்கு இடையே சரிபட்டு வரவில்லை என்று தெரிவித்தார் ராணா. ராணா, பிரபாஸ் ஆகியோரில் ராணா தான் முதலில் திருமணம் செய்து கொள்வார் என்றார் ராஜமவுலி. ஆனால் அந்த திருமணம் எவ்வளவு காலம் நிலைக்கும் என்பது தெரியவில்லை என்று மேலும் தெரிவித்தார் ராஜமவுலி.

தோழிகள்

தோழிகள்

தனக்கு friends with benefits இருந்ததாகவும், இருப்பதாகவும் தெரிவித்தார் ராணா. தனக்கு அப்படி யாரும் இல்லை என்று கூறிய பிரபாஸ் பின்னர் நிகழ்ச்சியில் பொய் சொன்னதாக கூறினார். ராணாவின் பெயர் அவ்வப்போது ஏதாவது ஒரு நடிகையுடன் அடிபடும் நிலையில் அவர் இப்படி தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா

அனுஷ்கா

தற்போதுள்ள நடிகைகளில் தீபிகா படுகோனே தான் மிகவும் ஹாட்டான நடிகை என்றார் ராணா. பிரபாஸை கத்ரீனா கைஃபுடன் செட் அப் செய்வேன், கிசுகிசுக்க ரன்பிர் கபூரை அழைப்பேன், தெலுங்கு திரையுலகில் கவர்ச்சியான நடிகை என்றால் அது அனுஷ்கா தான் என்று தெரிவித்தார் ராணா.

பிரபாஸ்

பிரபாஸ்

ராணாவை த்ரிஷாவுடன் செட் அப் செய்வேன், தெலுங்கு திரையுலகில் கவர்ச்சியான மற்றும் எனக்கு பிடித்த நடிகை என்றால் அது அனுஷ்கா தான். இந்த பதிலை வைத்து எதையும் யூகிக்க வேண்டாம். பாலிவுட் நடிகை தீபிகாவை பார்த்தால் அசந்து போவதாக கூறினார் பிரபாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X