உன் பொண்டாட்டி ஒர்த்தே இல்லை.. கலாய்த்தவர்களை விளாசிவிட்ட் TTF வாசன்.. மனுஷன் நின்னுட்டாருயா!
சென்னை: தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய நபர்களில் டாப் 10 லிஸ்டில் இடம் பெறக் கூடியவர் TTF வாசன். கடந்த சில ஆண்டுகளாக தான் அவர், எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்காமல் இருக்கிறார். இப்படி இருக்கையில் சில மாதங்களுக்கு முன்னர் TTF வாசன் தனது மாமன் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் நண்பர்கள் முன்னிலையில் கேரளா குருவாயூர் கோவிலில் நடைபெற்றது. சில வாரங்களுக்கு முன்னர் தனது மனைவி இவர்தான் என்று அறிமுகப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் TTF வாசன்.
அவரது இந்த வீடியோவுக்கு, இணையவாசிகள் சிலர் அவரது மனைவியின் தோற்றம் குறித்து விமர்சித்தனர். குறிப்பாக உருவ கேலி செய்தனர். இது தொடர்பாக மிகவும் காட்டமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் TTF வாசன். TTF வாசன் இவ்வாறு பேசியது பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது மட்டும் இல்லாமல், பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பதிலடி: அதாவது, " வொர்த்தே இல்லைனு ஒரு பொண்ணு கமெண்ட் போட்டு இருக்கு.. ஆமாம்... என் பொண்டாட்டி அழகா இல்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள். அழகு என்று அவர்கள் எதை அர்த்தப்படுத்துகிறார்கள்? எனது மனைவி எனக்கு உண்மையாகவே அழகுதான், பேரழகு தான். இப்போது உள்ள தலைமுறையில் பல ஆண்டுகள் காதலிப்பார்கள், வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள், வீட்டை விட்டு வெளியே வா, விருப்பத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆண்கள் சொல்லும் போது, பெண்கள் தங்களது குடும்பத்தை விட்டு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு, பிரேக் அப் என்று சொல்லிவிடுவார்கள்.
எது அழகு?: இப்படி இருக்கும் தலைமுறையில், ஒரு பெண் அவ பாட்டுக்கு பேக் எடுத்துக் கொண்டு கிளம்பி வந்து விட்டாள், வாங்க கல்யாணம் பண்ணிக்கலாம் என்று. இதற்கு என் மீது இருந்த நம்பிக்கையும் ஒரு காரணம். எனது மனைவிக்கு சமைக்கத் தெரியாது. காலேஜ் போய்க்கொண்டு இருக்கிறார்கள். காலேஜ் முடிக்க வேண்டும். இவ்வளவு கமிட்மெண்ட்கள் இருந்தாலும் ஒரு நம்பிக்கையுடன் வந்துவிட்டார். இந்த மனதைத்தான் நான் அழகு என்று பார்க்கிறேன். 20 வருஷம் இருக்குமா உடல் அழகு? ஒரு சின்ன விபத்து ஏற்பட்டு விட்டால், இருக்குமா அந்த அழகு? அழகு என்பது நிலையானது இல்லை, உள்ளத்து அழகுதான் நிலையானது" என்று பேசி உள்ளார்.

பாராட்டும் விமர்சனமும்: TTF வாசன் இவ்வாறு பேசி வீடியோ பதிவிட்டுள்ளது பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தனது மனைவியை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காத கணவனாக என்றைக்கும் இருக்க வாழ்த்துகள் என்று எல்லாம் வாழ்த்தி வருகிறார்கள். மேலும் இந்த தலைமுறை பெண்கள் குறித்த அவரது கருத்தை பொதுவான கருத்தாக தெரிவித்ததற்கும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











