Vijay: ஜன நாயகனுக்கு நெருக்கடி?.. அடங்கமாட்டேன்.. இந்த மூஞ்சியைப் பார்த்தால் அப்படியா தெரியுது - விஜய்
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பேசியது பலரது கவனத்தை ஈர்த்திருந்தாலும், அவர் தனது பேச்சில் ஒரு இடத்தில் நக்கலாக பேசி உள்ளார் என்று இணையவாசிகள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும் பலர் இதைப் பகிர்ந்து வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அங்கு பேசிய நடிகரும் அக்கட்சியின் தலைவருமான விஜய், "எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும் அடங்கிப் போகவோ, அடிமையாகவோ, அண்டிப் பிழைக்கவோ நான் அரசியலுக்கு வரவில்லை. அறிஞர் அண்ணாவின் போதனை வெறும் வாய்மொழியில் அல்லாமல், செயலில் இருக்க வேண்டும்," என வலியுறுத்தினார்.
"ஆளும் அல்லது ஆண்ட கட்சிகளுக்கு பூத் என்பது கள்ள ஓட்டு போடும் இடம்; ஆனால் நமக்கு அது ஜனநாயகக் கூடம்," என அவர் சுட்டிக்காட்டினார். நமது கட்சிக்கு கூட்டணிக்கு கட்சிகள் இல்லாவிட்டாலும், தனியாக நின்று வெல்லும் வலிமையும் இருக்கிறது. யாருக்கும் இல்லாத மகளிர் படை நமக்கு உள்ளது என்றார்.
முதல்வன் படமா?: இந்த விஜய் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தா, எழுதி வச்சிக்கோங்க, இதுக்கு முன்னாடி இருந்தவங்க மாதிரியோ, இப்ப இருக்கவங்க மாதிரியோ ஊழல் செய்யவே மாட்டேன், ஒரு பைசா தொட மாட்டேன். எனக்கு அத தொட வேண்டிய அவசியமே இல்ல. இது என்ன முதல்வன் படமா? ஒரே நாள்ல வந்து இவரு சுத்தம் பண்ணிடுவாரா?னு கேட்கலாம். ஆனா, அது ஒரு பிராசஸ், அதுக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். எதுக்கும் ஆசைப்படாதவன் கண் முன்னாடி ஊழல் நடந்தா அத பாத்துட்டு அவன் சும்மா இருப்பான்னு நினைக்கிறீங்களா? என்று கேட்டார்.

ஜன நாயகன்: தொடர்ந்து பேசுகையில், நாம் மிக மிக முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம். நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், ஏதோ அழுத்தம் இருக்கும் என்று நினைக்கிறீர்களோ? அழுத்தமா?.. நமக்கா?., இந்த அழுத்தத்திற்கு எல்லாம் அடங்கிப்போகிற ஆளா இந்த ஆளு? இந்த மூஞ்சியைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது உங்களுக்கு? அதனால் அப்படியெல்லாம் நடக்காது, அதுவும் நம்மகிட்ட அப்படியெல்லாம் நடக்கவே நடக்காது" என்று பேசினார். விஜய் இவ்வாறு பேசிய வீடியோவை பகிர்ந்த இணையவாசிகள் விஜய் நக்கலாக பேசி உள்ளாரே என்று புருவம் உயர்த்தி வருகிறார்கள். சிலர் சூப்பர் சூப்பர் என்று விஜயைப் பாராட்டி வருகிறார்கள். மேலும் சிலர் ஜன நாயகன் சென்சார் விஷயம் தொடர்பாகத்தான் விஜய் மறைமுகமாக பேசுகிறார் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











