»   »  சிம்புவால் லேட்டஸ்டாக பாதிக்கப்பட்ட இரண்டு ஹீரோயின்கள்!

சிம்புவால் லேட்டஸ்டாக பாதிக்கப்பட்ட இரண்டு ஹீரோயின்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் சிம்பு நடிப்பில் லேட்டஸ்டாக ரிலீஸாகி படுதோல்வி அடைந்த படம். பொது ரசிகர்கள் மட்டுமின்றி சிம்புவின் தீவிர ரசிகர்களே கழுவி கழுவி ஊற்றிய இந்த படத்தால் இரண்டு ஹீரோயின்களின் கேரியர் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. அந்த இரண்டு ஹீரோயின்கள் ஸ்ரேயாவும் தமன்னாவும்.

ஸ்ரேயாவின் நிலைமை ஆல்ரெடி மோசமாகத்தான் இருந்தது. தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்று ஆசையுடன் ஏஏஏ படத்தில் நடித்தார் ஸ்ரேயா. ஆனால் அது நிறைவேறவில்லை. தமன்னா நிலையும் மிகவும் மோசமாகி விட்டது. வயதான கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க வைத்து விட்டனர்.

Two heroines affected by Simbu

செகண்ட் பார்ட்டில் முக்கியத்துவம் இருக்கும். சிம்புவுக்கு வில்லியே நீங்கள் தான் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். பாகுபலி பார்ட் 2 விலாவது சில நொடிகள் தலைகாட்ட முடிந்தது. ஏஏஏ செகண்ட் பார்ட் ஆரம்பிக்க வழியே இல்லை. இதன் காரணமாக தமன்னாவிடம் தமிழில் எந்த வாய்ப்பும் இல்லை. விக்ரமுடன் நடிக்கும் ஸ்கெட்ச் தவிர.

இதுவரை சிம்புவை காதலித்து பாதிக்கப்பட்டவர்களை பார்த்திருப்போம். ஆனால் இவர்கள் இரண்டு பேரும் நடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சிரிக்கிறது கோலிவுட்.

English summary
Actress Tamanna and Shriya Saran have affected by AAA movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil