விஜய்சேதுபதிக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்!

சென்னை : மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதிக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

UAE honors Actor Vijay sethupathi with Golden Visa

குட்டி நாடான அமீரகம் தன் நாட்டில் சிறந்த முதலீட்டாளர்கள், பிசினஸ்மேன்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய வகையிலான கோல்டன் விசாவை 2019ம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. அமீரகத்தில் வசிக்கும் 6,800 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு இந்த விசா வழங்கப்படும். கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100 சதவிகித உரிமையை அனுபவிக்க முடியும்.

இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி கடந்த மாதம் ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை நடிகை திரிஷா பெற்றார். இதையடுத்து, இந்த விருது இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபனுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஐக்கிய அமீரகம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசாவை வழங்கி கௌரவித்துள்ளது. விஜய்சேதுபதியின் ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறுவதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்வதாக நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X