சைவம் பார்த்தேன்... நல்லாருந்தது.. நானே ரிலீஸ் பண்றேன்! - உதயநிதி
இயக்குநர் விஜய்யின் சைவம் படத்தை தனது ரெட்ஜெயன்ட் பேனரில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
தலைவா படத்துக்குப் பிறகு இயக்குநர் விஜய் உருவாக்கி வரும் படம் சைவம். நாசர், பேபி சாரா நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை நல்லபடியாக வெளியிட்ட பிறகுதான் திருமண அழைப்பு தருவேன் என உறுதியாக உள்ளார் விஜய்.

இந்த நிலையில் படத்தை தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பார்த்தார். படம் அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனதாம்.
படம் பார்த்த உடனே அவர் வெளியிட்ட ட்விட்டில், "சைவம் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சது. இந்தப் படத்தை நானே வெளியிடப் போகிறேன். விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்பேன்,' என்று கூறியுள்ளார்.
தாண்டவம், தலைவா என அடுத்தடுத்து சோதனையைச் சந்தித்த விஜய், சொந்தமாகத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் இந்த சைவம்.
படத்தை வெளியிடும் பொறுப்பை உதயநிதி ஏற்றுக் கொண்டதன் மூலம், சுமை குறைந்து தெம்பாக கல்யாண வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











