உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் "ஆர்டிகிள் 15" தமிழ் ரீமேக் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் !
சென்னை: கனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜ் காமராஜா இப்பொழுது "ஆர்டிகிள் 15" தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார்.
சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு கொரோனா சூழல் காரணமாகவும், உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரச்சாரம் காரணமாகவும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் "ஆர்டிகிள் 15" படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தூங்குவது பற்றிய முக்கிய அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

முதல் படமே பிளாக்பஸ்டர்
இயக்குனர் அருண்ராஜ் காமராஜா சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான கனா திரைப்படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே பிளாக்பஸ்டர் வெற்றி பெற கனா தெலுங்கில் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது.

ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்
இந்தநிலையில் அருண்ராஜ் காமராஜா அடுத்த படத்தை முன்னணி நடிகர் ஒருவரை வைத்து இயக்க இருப்பதாக கூறப்பட்டது அந்த வகையில் இப்போது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் பிரபல ஹிந்தி திரைப்படம் "ஆர்டிகிள் 15" தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியில் வெளியான "ஆர்டிகிள் 15" திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது இதில் ஆயுஷ்மான் குரானா ஹீரோவாக நடித்த நடித்திருக்க ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் சாதிய பாகுபாடுகளை அழுத்தம் திருத்தமாக கூறி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

போனி கபூர் கைப்பற்றியிருந்தார்
இப்படத்தின் தென்னிந்திய உரிமையை பிரபல தயாரிப்பாளரும் ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் கைப்பற்றியிருந்தார். இப்பொழுது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜ் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கருப்பன் பட ஹீரோயின் தன்யா ரவிச்சந்திரன் நடித்து வருகிறார்.
Recommended Video

செப்டம்பர் 23ஆம் தேதி மீண்டும் துவங்குகிறது
கடந்த வருடமே தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றது அதன் பிறகு கொரோனா சூழல் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது. அதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரச்சாரத்தி பிஸியானதால் கடந்த சில மாதமாக படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் "ஆர்டிகிள் 15" படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி செப்டம்பர் 23ஆம் தேதி தேதியான நாளை "ஆர்டிகிள் 15" படப்பிடிப்பு மீண்டும் துவங்க உள்ளது. படபிடிப்பு கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது.
ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











