"நெஞ்சுக்கு நீதி " டப்பிங் பணிகளை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கனா படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இப்பொழுது நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை இயக்கி வருகிறார்

இந்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஆர்டிகள் 15 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக நெஞ்சுக்கு நீதி உருவாகிவருகிறது

சாதி ரீதியிலான பாகுபாடுகளை குறித்த படமாக உருவாகி வரும் நெஞ்சுக்கு நீதி படத்தின் காட்சிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனார்

சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனார்

நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும்,நடிகரும், இயக்குனருமான அருண்ராஜா காமராஜ் கனா என்ற படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ்,தர்ஷன் ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக

அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக

கனா படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமடைந்த அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை இயக்கி வருகிறார். ஹிந்தியில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஆர்டிகள் 15 என்ற படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக இப்படம் தயாராகிவருகிறது.

பிக்பாஸ் ஆரி சிறப்பு வேடத்தில்

பிக்பாஸ் ஆரி சிறப்பு வேடத்தில்

சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் காட்டு பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக கருப்பன் பட நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடித்து வருகிறார். ஷிவானி ராஜசேகர், இளவரசு, மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிக்பாஸ் ஆரி இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

தயாரிப்பாளர் போனி கபூர்

தயாரிப்பாளர் போனி கபூர்

நேர்கொண்ட பார்வை,வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிடுகிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. திப்பு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் ஸ்டூடியோவில் தீவிரமாக டப்பிங்

உதயநிதி ஸ்டாலின் ஸ்டூடியோவில் தீவிரமாக டப்பிங்

உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்க நடிகர் உதயநிதி ஸ்டாலின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக டப்பிங் பேசியவாறு ஸ்டூடியோவில் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்பொழுது பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X