கொரோனாவிற்கு பிறகு மீண்டும் விக்ரம் படத்தின் சூட்டிங்கில் இணைந்த உலகநாயகன்

சென்னை : நடிகர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றார்.

இதை தொடர்ந்து அவர் விக்ரம் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்காமல் போனது.

இந்நிலையில் தற்போது மீண்டும் விக்ரம் படத்தின் சூட்டிங்கில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

விக்ரம் படம்

விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன், சினிமாவையும் அரசியலையும் ஒரே நேரத்தில் சிறப்பாக கொண்டு செல்கிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

கமலுக்கு கொரோனா பாதிப்பு

கமலுக்கு கொரோனா பாதிப்பு

படத்தின் சூட்டிங் சிறப்பான வகையில் நடைபெற்று வந்த நிலையில், அமெரிக்காவிற்கு சென்ற கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார்.

பிக்பாசில் பங்கேற்காத கமல்

பிக்பாசில் பங்கேற்காத கமல்

சில தினங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கமலை பார்க்க முடியவில்லை. அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் மீண்டும் பங்கேற்று தொகுத்து வழங்கினார்.

விக்ரம் சூட்டிங்கிலும் பங்கேற்கவில்லை

விக்ரம் சூட்டிங்கிலும் பங்கேற்கவில்லை

இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டதையடுத்து கமல் விக்ரம் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்கவில்லை. அவர் இல்லாமல் எடுக்கப்பட வேண்டிய சூட்டிங்கை லோகேஷ் கனகராஜ் மேற்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது கமலின் உடல்நிலை தேறியதையடுத்து அவர் தற்போது மீண்டும் விக்ரம் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.

கமலின் 232வது படம்

கமலின் 232வது படம்

கமலின் 232வது படமாக உருவாகி வருகிறது விக்ரம். கடந்த 10ம் தேதிமுதல் இந்த படத்தின் அடுத்த ஷெட்யூலுக்கான சூட்டிங் நடைபெற்று வருகிறது. படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டவர்களும் நடித்து வருவது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Recommended Video

விளக்கு அணைந்து விட்டால் ஜாதி இல்லை | Kamal-லின் கருத்தை மறுத்த Pa.Ranjith
அனிருத் இசை

அனிருத் இசை

படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு சில ஷெட்யூல்கள் முடிந்துள்ளன. தற்போது கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரின் காம்பினேஷன் காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கமல் தயாரிப்பு

கமல் தயாரிப்பு

படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் ஆர் மகேந்திரனுடன் இணைந்து தயாரித்து வருகிறது. படத்தில் தேசிய விருது பெற்ற கிரீஷ் கங்காதரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மேலும் எடிட்டிங்கை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X