ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்... உலகநாயகன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை : உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் விக்ரம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

4 ஆண்டுகளுக்கு பின்பு வெளியாகும் கமல் படம் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படம் ஏப்ரலில் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய்யின் பீஸ்ட் படமும் ஏப்ரலில் வெளியாக உள்ளதால் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் காத்திருக்கிறது.

கமலின் விக்ரம் படம்

கமலின் விக்ரம் படம்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வரூபம் 2 படம் வெளியானது. அதையடுத்து அவர் அரசியல், ரியாலிட்டி ஷோ என பிசியான நிலையில், அவரது அடுத்த படம் வெளியாகவில்லை. இந்நிலையில் அவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் உருவாகி வருகிறது.

மாறுபட்ட கேரக்டர்

மாறுபட்ட கேரக்டர்

இந்தப் படத்தில் மாறுபட்ட கேரக்டரில் கமல் நடித்துள்ளார். படத்தின் டீசரில் இதை உணர முடிகிறது. படத்தில் மேலும் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்கீஸ், ஷிவானி நாராயணன், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் இந்தியிலும் வெளியாகவுள்ளது.

வில்லனான விஜய் சேதுபதி

வில்லனான விஜய் சேதுபதி

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின்மூலம் சிறப்பான கவனத்தை பெற்றுள்ள லோகேஷ் கனகராஜ், இந்தப் படத்தை தற்போது இயக்கி வருகிறார். படத்தில் விஜய் சேதுபதி விஜய், ரஜினிக்கு பிறகு கமலுக்கு வில்லனாகியுள்ளார். இந்த விஷயமும் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு

ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு

படத்தின் சூட்டிங் சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு ஏறக்குறைய நிறைவுக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காணப்படுகின்றனர். படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் படத்தின் சூட்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது.

தடைபட்ட சூட்டிங்

தடைபட்ட சூட்டிங்

இடையில் கமலின் கொரோனா பாதிப்பால் படத்தின் சூட்டிங் பாதிக்கப்பட்டு, சில நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனிடையே மீண்டும் சூட்டிங்கில் கமல் கலந்து கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக படம் ஏப்ரலில் வெளியாக உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்திருந்தார்.

Recommended Video

Jaibhim Manikandan-க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உலகநாயகன் Kamal Hassan | SNSM
 ஏப்ரல் 28ல் ரிலீஸ்?

ஏப்ரல் 28ல் ரிலீஸ்?

இந்நிலையில் படம் தற்போது ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டுள்ளது. விஜய்யின் பீஸ்ட் படமும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ள நிலையில், அதே மாதத்தில் கமலின் படமும் வெளியாக உள்ளது கண்டிப்பாக ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X