இந்த வயதிலும் இப்படியா? நீச்சல் உடையில் எல்லை மீறிய நடிகை!
சென்னை: நடிகை ரோஜா சாயலில் இருக்கும் அழகான நடிகை தான் மாளவிகா. இவர், தமிழில் அஜித்திற்கு ஜோடியாக உன்னைத் தேடி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழில் இவருக்கு என்று ரசிகர்கள் உருவானார்கள். குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து படத்தில் நடித்த நடிகை மாளவிகா, திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகினார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கவர்ச்சி போட்டோ ஒன்றை இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.
மாடல் அழகியான மாளவிகா தமிழ் , தெலுங்கு, இந்தி, மலையாளம் படங்களில் நடித்துள்ளார். 1999ம் ஆண்டு சுந்தர் சி இயக்கி உருவான உன்னைத்தேடி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். டஸ்கி நிறமாக இருந்தாலும், இவரின் போதை ஏற்றும் கண் அழகுக்கு என்று தனி ரசிகர்கள் இருந்தார்கள். அழகும் திறமையும் இருந்த போதும் அவருக்கு ஏனோ படவாய்ப்பு சரியாக அமையவில்லை.

நடிகை மாளவிகா: தமிழில் படவாய்ப்பு இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்ற மாளவிகா ஒரு சில படங்களில் நடித்துவிட்டு மீண்டும் தமிழில், சூர்யா நடித்த பேரழகன் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார். அதேபோல, சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். பின் படவாய்ப்பு இல்லாததால், சித்திரம் பேசுதடி படத்தில் படத்தில் வாள மீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் பாடலில் பட்டையை கிளப்பியிருந்தார். இதையடுத்து, ஜீவா நடித்த திருட்டுபயலே படத்தில் நல்ல ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் நல்ல படவாய்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி மாளவிகாவிற்கு படவாய்ப்பு வரவில்லை.

எல்லை மீறும் கவர்ச்சி: இதனால், நடித்ததுபோதும் என முடிவு செய்த நடிகை மாளவிகா, 2007ஆம் ஆண்டு தொழிலதிபர் சுமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவருக்கு, ஆரவ் என்கிற ஒரு ஆண்குழந்தையும் அன்யா என்கிற ஒரு பெண்குழந்தையும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட மாளவிகா, அவ்வப்போது சமூக வலைத்தள பக்கத்தில் குடும்பத்தோடு இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நீச்சல் உடையில் பின் பக்க அழகை காட்டி, கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த இணையவாசிகள் இந்த வயதில், இந்த கவர்ச்சி தேவையா என்றும், இதெல்லாம் எதற்காக என்றும் இணைத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை மாளவிகா, ஜீவாவின் 'கோல்மால்' படத்தில் மாளவிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், மிர்ச்சி சிவா, ஜீவா, தன்யா ஹோப் மற்றும் பாயல் ராஜ்புட் ஆகியோர் நடித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











