கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மருமகளுக்காக பிரச்சாரம் செய்த நடிகர் உபேந்திரா
ஷிமோகா: நாடாளுமன்ற தேர்தலில் ஷிமோகாவில் போட்டியிடும் கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதாவுக்கு ஆதரவாக நடிகர் உபேந்திரா பிரச்சாரம் செய்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதியில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் கீதாவுக்கு ஆதரவாக யார் பிரச்சாரம் செய்தார்கள் என்று பார்ப்போம்.

சிவராஜ்குமார், உபேந்திரா
கன்னட நடிகர் உபேந்திரா தனது நண்பர் சிவராஜ்குமாருடன் சேர்ந்து நேற்று ஷிமோகாவில் கீதாவுக்கு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரம்
திறந்த காரில் வந்த உபேந்திரா வரும் தேர்தலில் கீதாவுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொண்டார்.

ரசிகர்கள்
ஷிமோகாவில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தனது ரசிகர்களுடன் உபேந்திரா நிற்பதை சிவராஜ்குமார் போட்டோ எடுத்தார்.

நண்பேன்டா
1994ம் ஆண்டு சூப்பர் ஹிட்டான ஓம் படத்தில் ஒன்று சேர்ந்து நடித்ததில் இருந்தே சிவராஜ்குமாரும், உபேந்திராவும் நல்ல நண்பர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீதா
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள முதல் நபர் கீதா தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











