கிடப்பில் போடப்பட்ட வா டீல்… தீபாவளிக்கு ரிலீஸ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

சென்னை : அருண்விஜய் நடிப்பில் உருவாகி நீண்டநாட்களாக வெளியாகாமல் இருந்த வா டீல் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் ராதாவின் மகள் கார்த்திகா நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு ஒரு சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது.

வா டீல்

வா டீல்

இயக்குனர் ரத்னா சிவா இயக்கத்தில் 2012ம்ஆண்டு தயாரான திரைப்படம் வா டீல். இத்திரைப்படம் 2015ம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. டிரைலர், டீசர் வெளியிடப்பட்டு விளம்பரப்படுத்தியும் படம் வெளியாகிவில்லை. இந்த திரைப்படத்தை ஒடிடியில் வெளியிட பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும் இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகவில்லை.

தீபாவளிக்கு ரிலீஸ்

தீபாவளிக்கு ரிலீஸ்

இந்நிலையில் இத்திரைப்படம் தீபாவளிக்கு நவம்பர் 4ந் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த ,சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்ற துணிச்சலான தகவலை படக்குழு அறிவித்துள்ளது. நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இத்திரைப்படம் வெளியாவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

யானை படத்தில்

யானை படத்தில்

அருண்விஜய் ஹரி இயக்கத்தில் உருவாகிவரும் யானை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அருண் விஜய் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், போஸ் வெங்கட், யோகி பாபு, இமான் அண்ணாச்சி, கே.ஜி.எப். புகழ் கருடா ராம், ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

கிராமத்து பின்னணியில் தயாராகும் திகில் படம், இதுவாகும் இத்திரைப்படம் தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டன. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது உள்ளது.

பல படங்கள்

பல படங்கள்

ஓ மை டாக், அக்னி சிறகுகள்,பார்டர், பாக்சர், சினம் போன்ற திரைப்படங்களை கையில் வைத்துள்ளார். இதில்,பார்டர் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில், ரெஜினா அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X