Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அதிரடி காட்டும் அருண் விஜய்யின் ‘வா டீல்‘… டீசர் ரிலீஸ் !
சென்னை : அருண்விஜய் நடிப்பில் உருவான வா டீல் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் ராதாவின் மகள் கார்த்திகா நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு ஒரு சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. தற்போது இத்திரைப்படம் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாக உள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு ஆயுத பூஜை கொண்டாடிய விஜய்.. வைரலாகும் புகைப்படங்கள்!
வா டீல்
இயக்குனர் ரத்னா சிவா இயக்கத்தில் 2012ம்ஆண்டு தயாரான திரைப்படம் வா டீல். இத்திரைப்படம் 2015ம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த திரைப்படத்தை ஒடிடியில் வெளியிட பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும் இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகவில்லை.
தீபாவளிக்கு ரிலீஸ்
இந்நிலையில் இத்திரைப்படம் தீபாவளிக்கு நவம்பர் 4ந் தேதி வெளியாக உள்ளது. தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த ,சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இத்திரைப்படம் வெளியாவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வா டீல் டீசர் ரிலீஸ்
இந்நிலையில், இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. அதில் லைஃப்ல ஜெயிக்கனும்னா பிரண்ஷ் வேணும்....ஜெயிச்சிக்கிட்டே இருக்கணும்னா எதிரி வேணும் என்ற வசனம் டீசரில் இடம் பெற்றுள்ளது. கார்த்திகா நாயரை காதலிக்கும் அருண்விஜய் அவருக்காக ஒரு பெரிய ரிஸ்கை எடுப்பது போல டீசரில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. டீசரில் தமனின் இசை பட்டையை கிளப்பி உள்ளது.
Recommended Video
யானை படத்தில்
அருண்விஜய் ஹரி இயக்கத்தில் உருவாகிவரும் யானை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், போஸ் வெங்கட், யோகி பாபு, இமான் அண்ணாச்சி, கே.ஜி.எப். புகழ் கருடா ராம், ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
பல படங்கள்
ஓ மை டாக், அக்னி சிறகுகள்,பார்டர், பாக்சர், சினம் போன்ற திரைப்படங்களை கையில் வைத்துள்ளார். இதில்,பார்டர் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில், ரெஜினா அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.