வடசென்னை 2 எப்போ ஸ்டார்ட் தெரியுமா?.. தனுஷ் சொன்ன சூப்பர் அப்டேட்.. முடிவுக்கு வந்த சஸ்பென்ஸ்

சென்னை: தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் கடந்த 2018அம் ஆண்டு வெளியான படம் வடசென்னை. அனைவராலும் கொண்டாடப்படும் படமாக அது இருக்கிறது. படத்தின் இரண்டாவது பாகம் வரும் என்று நீண்ட நாட்களாக சொல்லப்பட்டாலும்; இன்னும் ஷூட்டிங் தொடங்கியபாடில்லை. அதனால் தனுஷும், வெற்றிமாறனும் எந்த மேடையில் ஏறினாலும் அவர்களிடம் வடசென்னை 2 படத்தின் அப்டேட் பற்றித்தான் ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

தனுஷ் இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். அவர் எத்தனையோ இயக்குநர்களுடன் பணியாற்றினாலும் வெற்றிமாறனுடன் பணியாற்றும் போது அந்தப் படத்தின் அவுட் புட் வேறு தரத்தில் வரும். தனுஷை வைத்து பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனா காலம் படத்தின்போதுதான் இரண்டு பேரும் முதன்முறையாக சந்தித்துக்கொண்டார்கள். அப்போதே அவர்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது. வெற்றி மீது அபார நம்பிக்கை வைத்து தேதிகள் கொடுத்தார். அதனையடுத்து பொல்லாதவன் படம் உருவானது. சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

Vada Chennai 2 Update Dhanush Confirms Sequel to Start Soon
Photo Credit:

இரண்டாவது படமும் ஹிட்: அந்தப் படத்துக்கு பிறகு மீண்டும் ஆடுகளம் படத்தில் இணைந்தார்கள். அது வெற்றிக்கு இரண்டாவது படம். அப்படம் பொல்லாதவனைவிடவும் ஒரு படி மேலே இருந்தது. மதுரை, சேவல் சண்டை, மனிதர்களுக்கிடையேயான ஈகோ ஆகியவற்றை மைய சரடாக வைத்து உருவாகியிருந்த ஆடுகள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி தேசிய விருதுகளையும் அள்ளியது. இன்றுவரை அந்தப் படம் அனைவரது ஃபேவரைட் என்பது குறிப்பிடத்தக்கது.

வடசென்னை திரைப்படம்: முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு தனுஷ் தயாரிப்பில் விசாரணையை முடித்துவிட்டு; வடசென்னை படம் மூலம் மீண்டும் அவரை இயக்கினார் தனுஷ். இந்தப் படமும் வழக்கம்போல் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதில் ஸ்பெஷல் என்னவென்றால் அவர்கள் இணையும் படம் முந்தைய படத்துக்கு ஒரு படி மேலே இருப்பதுதான். தொடர்ந்து அசுரனையும் இயக்கி வெற்றியடைந்து தேசிய விருதை வென்றார்கள் அவர்கள். இப்படி கோலிவுட்டில் அதிக சக்சஸ் கொடுத்த கூட்டணிகளில் ஒன்றாக இருக்கிறது தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி.

Also Read
திரிஷா காதலிப்பது விஜய்யை அல்ல.. அந்த பெரிய வீட்டு மருமகளாகியிருக்கணும்.. சுசித்ரா என்னென்னம்மோ சொல்றாங்க
திரிஷா காதலிப்பது விஜய்யை அல்ல.. அந்த பெரிய வீட்டு மருமகளாகியிருக்கணும்.. சுசித்ரா என்னென்னம்மோ சொல்றாங்க

வடசென்னை 2: வடசென்னை படத்தின் முடிவில் 'அன்புவின் எழுச்சி' என்று முடித்து இரண்டாம் பாகத்துக்கான லீடை கொடுத்திருந்தார் இயக்குநர். முதல் பாகம் வெளியான சில வருடங்களிலேயே இரண்டாவது பாகமும் வந்துவிடும் என ஆர்வமானார்கள் ரசிகர்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேரும் வரிசையாக வெவ்வேறு படங்களில் கமிட்டாகி வேலை செய்தார்கள். இதனால் பொறுமையிழந்த பலரும்; அவர்கள் எந்த மேடைக்கு சென்றாலும் வடசென்னை 2 படம் பற்றி கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அதற்கு அவர்களும், இப்போ வந்து விடும் அப்போ வந்துவிடும் என பதிலளித்தார்கள்.

தனுஷ் சொன்ன சூப்பர் அப்டேட்: இந்நிலையில் வேல்ஸ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் தனுஷ். வழக்கம்போல் இப்போதும் அவரிடம் வடசென்னை 2 பற்றி அங்கிருந்த மாணவர்கள் கேட்டார்கள். அதற்கு பதிலளித்த தனுஷ், 'வடசென்னை 2. உங்கள் சேர்மேன்தான் எங்கள் தயாரிப்பாளர். விரைவிலேயே வடசென்னை 2 ஆரம்பிக்கப்போகிறோம். உங்களுக்கெல்லாம் தெரியப்போகுது. இனிமேலாவது எந்த மேடைக்கு போனாலும் வடசென்னை 2 டாபிக்கை விட்டுவிட்டு வேறு ஏதாவது பேசலாம் என்று நினைக்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X