தனுஷின் கடின உழைப்பில் மண்ணை அள்ளிப் போட்ட தமிழ் ராக்கர்ஸ்
Recommended Video

சென்னை: வட சென்னை படம் ரிலீஸான அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நடிப்பில் நேற்று வெளியான வட சென்னை படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தனுஷ் அன்பு கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் படக்குழு அதிர்ச்சி அடையும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
[துரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் 'வடசென்னை' - விமர்சனம்]

வட சென்னை
வட சென்னை படம் ரிலீஸான சில மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் அது வெளியிடப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில் இருந்து பலரும் படத்தை டவுன்லோடு செய்துள்ளனர். படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் டவுன்லோடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

வசூல்
வட சென்னை படம் ரூ. 65 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. தனுஷின் 3 ஆண்டு கால உழைப்பை தமிழ் ராக்கர்ஸ் வீணடித்துள்ளது. படம் ஆன்லைனில் கசிந்துள்ளதால் தியேட்டருக்கு செல்வோரின் எண்ணிக்கை குறையும். இதனால் வசூல் பாதிக்கப்படும் என்பதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஆன்லைன்
புதுப்படங்களை ரிலீஸான கையோடு இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ். படத்தை ரிலீஸ் செய்பவர்கள் விஷாலுக்கு பதில் தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுத்த சம்பவங்களும் நடந்துள்ளது. இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸை ஒழித்தே தீர்வேன் என்று சபதம் எடுத்த விஷாலின் சண்டக்கோழி 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமுதாயம்
சமுதாயத்திற்கு உதவி செய்யும் வகையில் சன் நாம் ஒருவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் விஷால். முதலில் போட்ட சபதத்தை நிறைவேற்றி அந்த தமிழ் ராக்கர்ஸை காணாமல் போகச் செய்தால் சினிமா சமூகம் அவரை வாழ்த்தும் என்பதை அவர் எப்பொழுது உணர்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











