»   »  வடிவேலு-சுந்தர்.சி டர்ர்?

வடிவேலு-சுந்தர்.சி டர்ர்?

Subscribe to Oneindia Tamil

வடிவேலுவுக்கும், சுந்தர்.சிக்கும் இடையே புகைச்சலாகி விட்டதாம். இருவரும் இணைந்து இனி கலக்குவது சந்தேகம் என்கிறார்கள்.

சுந்தர்.சியின் ஆரம்ப காலப் படங்களில் காமெடியில் கலக்கி வந்தவர் கவுண்டமணி. அவரது காலம் முடிய, அப்படியே வந்து ஒட்டிக் கொண்டவர்வடிவேலு. சுந்தர்.சி., வடிவேலு கூட்டணியில் உருவான அத்தனை படங்களுமே மெகா ஹிட் தமாகா!

அதிலும் வின்னர் படத்தில் வடிவேலுவின் அலம்பல் எப்போது நினைத்தாலும் வாய் வலிக்க சிரிக்க வைக்கும். தொடர்ந்து தலைநகரம், கிரி, இரண்டுஎன சுந்தர்.சியின் படங்களில் தொடர்ந்து சிரிக்க வைத்தார் வடிவேலு.

சுந்தர்.சியின் இயக்கத் திறமையை விட வடிவேலுவின் காமெடிதான் சுந்தர் படத்தை தூக்கி நிறுத்தியது எனலாம்.

இப்போது இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு விட்டதாக பேச்சு கிளம்பியுள்ளது. எல்லாம் இரண்டு படத்தால் வந்த வினையாம். இரண்டு படத்தில்வடிவேலுவுடன், லொள்ளு சபா புகழ் சந்தானத்தையும் சேர்த்து நடிக்க வைத்திருந்தார் சுந்தர்.சி.

வடிவேலுவுக்கு இணையாக சந்தானத்துக்கும் காட்சிகள் வைத்திருந்தார். இது வடிவுேவை இரிட்டேட் செய்து விட்டதாம். எனக்குத் தெரியாமல்சந்தானத்தை நடிக்க வைத்து விட்டார் சுந்தர்.சி. இது என்னை அவமானப்படுத்தியதைப் போல உள்ளது. எனவே இனிமேல் சுந்தர்.சி. படங்களில்நான் நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம் வடிவேலு.

சுந்தர்.சி. தரப்போ வேறு மாதிரியாக இதற்கு விளக்கம் தருகிறது. சந்தானம் வரும் காட்சிகள் பிளாஷ்பேக் காட்சிகள். அதிலும் வடிவேலுவையேஎப்படி நடிக்க முடியும். இதை வடிவேலு புரியாமல் போனது வருத்தமாக உள்ளதாக சுந்தர்.சி தனக்கு நெருக்கமானவர்களிடம் முணகி வருகிறாராம்.

சண்டையை பெரிசாக்கி காமெடி கீமடி பண்ணிடாதீங்கப்பு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil