வடிவேலு மீதும் வழக்கு - கைதாவாரா?
விஜயகாந்த் ரசிகர்களுடன் நடந்த மோதல் தொடர்பாக நகைச்சுவை நடிகர் வடிவேலு மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விஜயகாந்த் தரப்பினர் 6 பேரைக் கைது செய்தது போல வடிவேலுவும் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடிவேலுவின் அலுவலகம் முன்பு விஜயகாந்த் ரசிகர்களும், அவரது தங்கை கணவரின் இறப்புக்கு துக்கம் கேட்டு வந்த அவரது உறவினர்களும் கார்களை நிறுத்தியிருந்தனர்.
இதுதொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு, வடிவேலுவை விஜயகாந்த் கட்சித் தொண்டர்கள் அடித்து விட்டனர். வடிவேலுவும் விஜயகாந்த் ஆதரவாளர்களை தாறுமாறாக திட்டியதாக தெரிகிறது.
இது தொடர்பாக இரு தரப்பினரும் விருகம்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்தனர். வடிவேலுவின் மேலாளர் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில், விஜயகாந்த் வீட்டு வாட்ச்மேன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட 24 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், விஜயகாந்த் தரப்பில் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் வடிவேலு மீதும் போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இத்தகவலை துணை ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் தரப்பினரைப் போல வடிவேலுவும் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











