twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாக்களித்தார் 'தெனாலிராமன்' வடிவேலு!

    By Shankar
    |

    சென்னை: கடந்த சட்டமன்றத் தேர்தலில் தன் பிரச்சாரத்தால் கலக்கிய வடிவேலு, இந்த தேர்தலின்போது ஒரு வாக்காளராக மட்டும் தன் கடமையைச் செய்தார்.

    கடந்த சட்டமன்றத் தேர்தல் வடிவேலு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. காரணம் அவர் திமுகவுக்கு பிரச்சார பீரங்கியாக நின்று வாக்கு சேகரித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்தார்.

    Vadivelu casts his vote

    ஆனால் தேர்தலில் திமுக தோற்றுப் போக, வடிவேலு சினிமாவில் ஓரங்கட்டப்பட்டார். இதை அவர் தானாக விரும்பி ஏற்ற ஓய்வு என்று வர்ணித்தார்.

    ஒருவழியாக மூன்றாண்டுகள் அமைதியாக இருந்தவர் இப்போதுதான் படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளார். முதல் படமாக தெனாலிராமன் வெளியாகிவிட்டது.

    அவர் படம் வெளியான சில தினங்களிலேயே தேர்தலும் வந்தது. அரசியலே வேணாம் சாமி என பகிரங்கமாகக் கூறிவிட்ட அவர், இந்தத் தேர்தலில் வாக்களிக்கவாவது வருவாரா என காத்திருந்தது மீடியா.

    காலையிலிருந்து வாக்களிக்க வராத வடிவேலு, மாலை 4-30 மணிக்குத்தான் சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளிக்கு வாக்களிக்க வந்தார்.

    ஓட்டைப் பதிவு செய்து முடித்ததும், வேக வேகமாக வெளியேறினார்.

    English summary
    Actor Vadivelu has casted his vote at Saligramam polling booth.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X