இன்னும் நிறைய இருக்கு டி மாப்ள.. விஜய்யை அட்டாக் செய்த வடிவேலு.. இப்படி போட்டு பிளக்குறாரே?
சென்னை: வைகை புயல் வடிவேலு இப்போது மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கேங்கர்ஸ் படம் வந்தது. அதற்கும் முன்னதாக வந்த மாரீசன், மாமன்னன் ஆகிய படங்கள் சூப்பர் வரவேற்பை பெற்றன. அடுத்ததாக பிரபுதேவாவுடன் சேர்ந்து பேங் பேங் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படி சினிமாவில் மும்முரமாக இருக்கும் அவர்; திமுக மேடையில் ஏறி விஜய்யை பயங்கரமாக அட்டாக் செய்திருக்கிறார்.
வடிவேலு இப்போது திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார். அவருக்கு எப்போதும் அந்தக் கட்சி மீது ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கும். அதோடு கூடுதலாக மாமன்னன் படத்தில் நடித்தபோது உதயநிதியோடு மேலும் நெருக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக கூடுதலாகவே திமுகவுக்கு சப்போர்ட் செய்துவருகிறார். 2011ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த்தை எதிர்ப்பதற்காக அக்கட்சியின் மேடையில் ஏறினார். சகட்டுமேனிக்கு கேப்டனை விளாசியதால்; விஜயகாந்த் இறப்புக்கு கூட அவரால் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

விஜய்க்கு எதிராக: இந்நிலையில் நேற்று நடந்த திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வடிவேலு, "முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சம்பவத்தை திடீரென்று செய்துவிட்டார். அனைவரது வங்கி கணக்குக்கும் 5,000 ரூபாயை போட்டுவிட்டார். திமுக அழிய வேண்டும் என சொன்னவர்; நன்றாக தூங்கிக்கொண்டிருந்தபோது அவர் காதில் இதை சொல்லிவிட்டார்கள் போல. ஐந்தாயிரமா என அதிர்ச்சியாகிவிட்டார். ஏன் இப்படி; மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். இவர் ஏன் அலறுகிறார்.
இது என்ன பிரமாதம்?: இது என்ன பிரமாதம். இன்னும் நிறைய இருக்கு டி மாப்ள.. எக்கச்சக்கமான விஷயங்கள் செய்யப்போகிறார். மு.க.ஸ்டாலினை சாதாரணமான ஆள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள்; ஏன் என்றால் பேச வேண்டிய வசனத்தை எல்லாம் மேடையில்தானே பேச வேண்டும். ஆனால் செயல்பாடு இருக்கும் ஒரே கட்சி திமுக மட்டும்தான். இந்தக் கட்சி மட்டும் ஆட்சியில் இல்லாத மாதிரி யோசித்து பாருங்கள். தமிழ்நாடே அழிந்துவிடும். இந்தக் கட்சியை விட்டால் வேறு கட்சியே இல்லை.
தட்டி கேட்க ஆளே இல்லை: தமிழ்நாடு என்ற பெயரையே மாற்றிவிடுவார்கள். ஏனெனில் தட்டி கேட்பதற்கு அந்த சைடில் யாருமே இல்லை. நம் கட்சியை தவிர்த்து. எந்த நெருக்கடியையும் சந்திக்கக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான். அவர் இருப்பதால் மட்டும்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு. மழலைகள், பெண்களுக்கு பாதுகாப்பு. என் தாய் மீது சத்தியமாக சொல்கிறேன் இந்தக் கட்சி மட்டும் இல்லையென்றால் கேடு காலம் ஆகிவிடும். கண்டிப்பாக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வது லட்சியம். 200 நிச்சயம்.
மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: 2026ல் அவர் முதலமைச்சராகப்போகும் ஸ்டாலினுக்கு இப்போதே வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன். அடுத்த முறை அமர்ந்த பிறகு மக்களுக்கு அவர் அள்ளி கொடுப்பார். அவர்தான் முதலமைச்சர் அவரை விட்டால் வேறு ஆளே இல்லை என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். இருந்தாலும் நாம் சாதாரணமகா இருந்துவிடக்கூடாது. கடுமையாக உழைக்க வேண்டும். திமுக என்றாலே உழைப்பு, உழைப்பு, உழைப்பு" என்றார்.


Click it and Unblock the Notifications















