ஆடிவா, பாடிவா ஆணழகை தேடிவா... திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சி அவசியம் தேவை என்கிறார் நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற படத்தில் புலிகேசியாகவும், புத்திரன் என்றகேரக்டரிலும் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் வடிவேலு.இதன் படப்பிடிப்பு விழுப்புரம் பகுதியில் ஒரு மலையடி வாரத்தில் நடைபெறுகிறது. ஹீரோ கெட்டப்பில் ஜிகு ஜிகுவெனதங்கமாக ஜொலிக்கும் உடையில் அந்த கால ராஜவாக ஆடிவா..பாடிவா ஆணழகை தேடிவா என்ற பாட்டை பாடி நடித்தார்வடிவேலு. இந்த பாட்டை 2 நாள் படம்பிடித்து உள்ளார்கள். 2 நாளாக ஒரே டிரஸ்தானா வேறே மாத்தக் கூடாதா என்று வடிவேலு கடுப்படிக்க, இந்த விஷயம் தயாரிப்பாளர் ஷங்கர் காதுக்குபோக, கடுப்பாகி போன ஷங்கர் மறு நாள் சூட்டிங்கையே கேன்சல் பண்ணிவிட்டு வடிவேலுக்கு புது காஸ்ட்யூம் தயார் பண்ணச்சொல்லி மீண்டும் சூட்டிங்கை நடத்தினாராம். இந்த படத்தில் 6 மாதத்திற்கு வடிவேலு மொத்தமாக கால்ஷீட் கொடுத்திருக்கிறராம். இந்த படத்தில் மன்னர் கால கதையைகாமெடியாக சொல்லப் போகிறாராம் இயக்குனர் சிம்புதேவன்.இந்தப் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக மோனிகா நடிப்பது உங்களுக்குத் தெரிந்தது தான். தமிழில் அவ்வளவாக எடுபடாதஇந்த மலையாளத்து சின்ன சேச்சி, தெலுங்கிலும் கன்னடத்திலும் தன்னால் முடிந்த கவர்ச்சியைக் காட்டி வருகிறார். இவர் தவிரநந்திதாவும் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.ராஜா காலத்துப் படம் என்பதால் ஏவிஎம் மற்றும் பிரசாத் ஸ்டுடியோக்களில் பிரமாண்டமான செட்டுகளைப் போட்டு படத்தைமும்முரமாக எடுத்து வருகிறார்கள்.படப்பிடிப்பில் கலந்து கொள்ள விழுப்பரத்துக்கு வந்த வடிவேலுவிடம் வாயைக் கிண்டியபோது, இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் தமிழ் புத்தாண்டுக்கு வெளிவர உள்ளது. இப் படத்திற்கு புலமைபித்தன் பாடல்கள்எழுதியுள்ளார். எனக்கு ஜோடியாக நடிகை மோனிகா நடிக்கிறார்.சினிமாவில் நகைச்சுவை என்ற போர்வையில் ஆபாசத்தை திணிப்பதை நான் விரும்ப மாட்டேன். காரணம் நகைச் சுவை காட்சிஎல்லா தரப்பு மக்களாலும் விரும்பி பார்க்க கூடிய ஒன்று. குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் படி நகைச் சுவை காட்சிகள் அமையவேண்டும்.அந்த கால நகைச்சுவை நடிகர்கள் போல் அட்வைஸ் சொல்ல நான் பெரிய மனிதன் இல்லை. இருந்தாலும் எனது படங்களில்இடம் பெறும் நகைச்சுவை காட்சிகள் மூலம் நல்ல கருத்துக்களை சொல்லி வருகிறேன்.சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் சினிமாவில் இடம் பெறுவது தடை செய்யப்படும் என்பது தேவையில்லாத வாதம். சிலபடங்களில் இந்தக் காட்சிகள் அவசியமாகிறது என்றார்.

By Staff

திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சி அவசியம் தேவை என்கிறார் நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற படத்தில் புலிகேசியாகவும், புத்திரன் என்றகேரக்டரிலும் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் வடிவேலு.

இதன் படப்பிடிப்பு விழுப்புரம் பகுதியில் ஒரு மலையடி வாரத்தில் நடைபெறுகிறது. ஹீரோ கெட்டப்பில் ஜிகு ஜிகுவெனதங்கமாக ஜொலிக்கும் உடையில் அந்த கால ராஜவாக ஆடிவா..பாடிவா ஆணழகை தேடிவா என்ற பாட்டை பாடி நடித்தார்வடிவேலு. இந்த பாட்டை 2 நாள் படம்பிடித்து உள்ளார்கள்.

2 நாளாக ஒரே டிரஸ்தானா வேறே மாத்தக் கூடாதா என்று வடிவேலு கடுப்படிக்க, இந்த விஷயம் தயாரிப்பாளர் ஷங்கர் காதுக்குபோக, கடுப்பாகி போன ஷங்கர் மறு நாள் சூட்டிங்கையே கேன்சல் பண்ணிவிட்டு வடிவேலுக்கு புது காஸ்ட்யூம் தயார் பண்ணச்சொல்லி மீண்டும் சூட்டிங்கை நடத்தினாராம்.


இந்த படத்தில் 6 மாதத்திற்கு வடிவேலு மொத்தமாக கால்ஷீட் கொடுத்திருக்கிறராம். இந்த படத்தில் மன்னர் கால கதையைகாமெடியாக சொல்லப் போகிறாராம் இயக்குனர் சிம்புதேவன்.

இந்தப் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக மோனிகா நடிப்பது உங்களுக்குத் தெரிந்தது தான். தமிழில் அவ்வளவாக எடுபடாதஇந்த மலையாளத்து சின்ன சேச்சி, தெலுங்கிலும் கன்னடத்திலும் தன்னால் முடிந்த கவர்ச்சியைக் காட்டி வருகிறார். இவர் தவிரநந்திதாவும் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ராஜா காலத்துப் படம் என்பதால் ஏவிஎம் மற்றும் பிரசாத் ஸ்டுடியோக்களில் பிரமாண்டமான செட்டுகளைப் போட்டு படத்தைமும்முரமாக எடுத்து வருகிறார்கள்.

படப்பிடிப்பில் கலந்து கொள்ள விழுப்பரத்துக்கு வந்த வடிவேலுவிடம் வாயைக் கிண்டியபோது,


இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் தமிழ் புத்தாண்டுக்கு வெளிவர உள்ளது. இப் படத்திற்கு புலமைபித்தன் பாடல்கள்எழுதியுள்ளார். எனக்கு ஜோடியாக நடிகை மோனிகா நடிக்கிறார்.

சினிமாவில் நகைச்சுவை என்ற போர்வையில் ஆபாசத்தை திணிப்பதை நான் விரும்ப மாட்டேன். காரணம் நகைச் சுவை காட்சிஎல்லா தரப்பு மக்களாலும் விரும்பி பார்க்க கூடிய ஒன்று. குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் படி நகைச் சுவை காட்சிகள் அமையவேண்டும்.

அந்த கால நகைச்சுவை நடிகர்கள் போல் அட்வைஸ் சொல்ல நான் பெரிய மனிதன் இல்லை. இருந்தாலும் எனது படங்களில்இடம் பெறும் நகைச்சுவை காட்சிகள் மூலம் நல்ல கருத்துக்களை சொல்லி வருகிறேன்.

சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் சினிமாவில் இடம் பெறுவது தடை செய்யப்படும் என்பது தேவையில்லாத வாதம். சிலபடங்களில் இந்தக் காட்சிகள் அவசியமாகிறது என்றார்.

Read more about: shankar vadivleus new movie
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X