தனுஷுக்கு இரண்டு முகங்கள்.. நான் பார்த்திருக்கிறேன்.. உண்மையை போட்டுடைத்த மூத்த நடிகை
சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் அவர் எதிர்பார்த்த ரிசல்ட்டை அவருக்கு கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியிருக்கும் அவர் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனது 51ஆவது படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் தனுஷ் குறித்து வடிவுக்கரசி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ் பல விமர்சனங்களை கடந்து இன்று மிகச்சிறந்த நடிகர் என்ற இடத்தில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் இவர் எல்லாம் நிலைக்கவே மாட்டார் என்று பலரும் கூறினர். ஆனால் அவர்களின் கணிப்பை தவிடுபொடியாக்கி கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார் தனுஷ். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் ரொம்பவே அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடும் அவர் ஆடுகளம், அசுரன் படங்களுக்காக தேசிய விருதையும் வாங்கியிருக்கிறார்.

கேப்டன் மில்லர்: அவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. மேலும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியும் படத்தின் கதை தனது பட்டத்து யானை நாவலின் கதை என்றும் கூறி பரபரப்பை கிளப்பினார்.
இயக்குநர் தனுஷ்: தனுஷ் நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலித்துவருகிறார். ராஜ்கிரண் உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கிய பவர்பாண்டி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தனது 50ஆவது படமான ராயன் படத்தையும் அவரே இயக்கியிருக்கிறார். படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. அடுத்த மாதம் படம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக பவர் பாண்டி படம் போல இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
வடிவுக்கரசி பேட்டி: இந்நிலையில் தனுஷ் குறித்து வடிவுக்கரசி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் பேசுகையில், "பவர் பாண்டி படத்துக்கு பிறகு அவர் இயக்கிய இரண்டாவது படத்தில் ஒரு சித்தர் கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அழைத்தார். கதையை அவர் என்னிடம் அவ்வளவு அமைதியாக சொன்னார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் வேறு ஒரு ஆளாக இருந்தார். அவரை பார்த்து அவரது உதவி இயக்குநர்கள் எல்லாம் நடுங்கினார்கள். அவ்வளவு டெரராக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தார்.
இரண்டு முகங்கள்: அதை பார்த்து நானே பயந்துபோய்விட்டேன். கதை சொல்லும்போது அவ்வளவு அமைதியாக இருந்த தனுஷா இது என்று ஆச்சரியப்பட்டேன். எனவே அவருடைய இரண்டு முகங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்தேன். அப்போது டான்ஸ் மாஸ்டர் சொல்லிக்கொடுக்கும்போது எதுவுமே தெரியாத மாதிரி தனுஷ் இருப்பார். ஆனால் ஒரே டேக்கில் ஆடிடுவார்" என்றார். முன்னதாக பவர் பாண்டி படத்துக்கு பிறகு ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரை வைத்து ஒரு படத்தை தனுஷ் இயக்க திட்டமிட்டு சில நாட்கள் ஷூட் நடந்து பிறகு படம் ட்ராப்பானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











