பேருக்குள் மட்டுமா.. சிரிப்பிலும் இருக்கிறது காந்தம்.. ரஜினிக்கு வைரமுத்து வாழ்த்து !
சென்னை : நடிகர் ரஜினிக்கு கவிஞர் வைரமுத்து தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடினார்.
நடிகர் ரஜினிகாந்திற்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த்
பெங்களூருவில் நடத்துநராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவான அபூர்வராகங்கள் படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து தனது அறிமுகத்தை கொடுத்தார். அந்த படத்தில் தொடங்கி காயத்ரி, மூன்று முடிச்சு, 16 வயதினிலே, எந்திரன், எந்திரன் 2 உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும் முத்திரை பதித்தார்.

சூப்பர் ஸ்டார் பட்டம்
ரஜினிகாந்திற்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுத்தந்த திரைப்படம் பைரவி. இந்த திரைப்படத்தில் அடுத்து, கலைப்புலி எஸ். தாணு தயாரித்த நான் போட்ட சவால் என்ற திரைப்படத்திலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டது.

வசூல் மன்னன்
எஜமான், தளபதி, அண்ணாமலை, வீரா, பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா என அடுத்தடுத்த அவர் படங்களின் வெற்றி வசூல் மன்னனாக அவரை உருவெடுக்க வைத்தது. இடையில் சில சறுக்கல்கள் இருந்தாலும் அசராமல் எழுந்து வெற்றிப் பயணத்தைத் தொடர அவர் ஒருபோதும் தவறியதே இல்லை. எந்திரன், கபாலி, 2.0, பேட்ட, காலா, அண்ணாத்த என அவரது படங்கள் இப்போதும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றன.
Recommended Video

பிறந்த நாள் வாழ்த்து
71வது பிறந்த நாளை கொண்டாடி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், கவிஞர் வைரமுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் தொலைபேசியில் வாழ்த்துச் சொன்னேன். உங்கள் வாழ்வில் இனி அரசியல் பணி இல்லை. ஆனால், அறப்பணி இல்லாமல் இல்லை. உடல்நலம் , மனவளம் , கலைவளம் , பொருள்வளம் கண்டு அறப்பணி தொடர்க என்றேன்.சிரித்தார். அவர் பேருக்குள் மட்டுமா சிரிப்பிலும் இருக்கிறது காந்தம். என ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











