Actor Simbu: சிம்புவின் ஓட்டம் வேற மாதிரி இருக்கும்.. STR48 குறித்து வலைப்பேச்சு அந்தணன் பேச்சு!

சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு, மாநாடு மற்றும் பத்து தல என அடுத்தடுத்த வெற்றி படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்த படங்களை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 படத்தில் கமிட் ஆகியுள்ளார் சிம்பு. இந்த படத்தில் வில்லன் மற்றும் ஹீரோ என இருவேறு கெட்டப்புகளில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் ஒரு கேரக்டர் திருநங்கை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்திற்காக நீண்ட தலைமுடியை வளர்த்துள்ள நடிகர் சிம்பு வெளிநாடுகளில் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் குதிரை ஏற்றம் ஆகிய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்தப் படத்திற்காக நீண்ட காலங்கள் காத்திருக்கிறார் சிம்பு. இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் அதிக காலத்தை எடுத்துக் கொண்ட நிலையில் இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் தொடர்ந்து வெளிநாட்டில்தான் உள்ளார். இந்தப் படத்திற்காக அதிகமான மெனக்கெடல்களை அவர் மேற்கொண்டு வருகிறார். படத்திற்காக நீண்ட தலைமுடியை வளர்ந்து, அந்த கெட்டப்பில்தான் பத்து தல ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார். இனிமேல் இப்படித்தான் என்ற ரேஞ்சுக்கு அந்த நிகழ்ச்சியில் அவரது பேச்சு காணப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை கமிட் செய்யாமல் உள்ளார்.

Valai pechu anthanan hails about Simbu and his STR48 movie

நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து சிறந்த கதைக்களங்களில் அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெங்கட் பிரபுவுடன் மாநாடு, கௌதம் மேனனுடன் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில் அடுத்ததாக வெளியான பத்து தல படமும் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.

STR48 படம்: இந்நிலையில் படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன. வரும் மே மாதத்தில் இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு அதிகமான மெனக்கடல்களை சிம்பு மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தில் அவர் இளவரசராக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது படத்தில் திருநங்கையாகவும் அவர் நடிக்க கமிட் ஆகியுள்ளார். படத்தில் ஹீரோ மற்றும் வில்லனாக சிம்பு நடிக்கவுள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகைகள் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்ற சிம்பு: இந்த படத்திற்காக வெளிநாட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ், குதிரை ஏற்றம் உள்ளிட்டவற்றை சிம்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில் படத்தின் 90 சதவிகித சூட்டிங் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலும் சில போர்ஷன்கள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நீண்ட தலை முடி உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார் சிம்பு. மொத்தத்தில் மிகப்பெரிய சம்பவம் ரசிகர்களுக்கு காத்திருப்பதாக அடுத்தடுத்து கூறப்பட்டு வருகிறது.

வலைப்பேச்சு அந்தணன் பாராட்டு: இந்நிலையில் இந்த படம் குறித்து பேசிய பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் இந்த படத்திற்கு பிறகு சிம்புவின் லெவல் வேறுவிதமாக மாறிவிடும் என்று கூறியுள்ளார் அவரது ஓட்டம் வேற மாதிரி இருக்கும் என்றும் அவருக்கு பொருத்தம் இல்லாத கதைக்கலங்களை இனிமேல் அவர் தேர்ந்தெடுக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். இனி அவரது கதை தேர்வுகள் அனைத்தும் பிரம்மாண்டமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிம்புவை தாண்டி தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் முன்னேறி வருவதாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் வலைப்பேச்சு அந்தணன் இந்த பதிலை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X