Ravi Mohan: கெனிஷா போட்ட உத்தரவை மீறாத ரவி மோகன்.. நடிகையுடன் சண்டையா? குண்டைத் தூக்கிப் போட்ட பிரபலம்
சென்னை: நடிகர் ரவி மோகன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படங்கள் என்றால் கராத்தே பாபு மற்றும் ப்ரோ கோட் என்ற படங்கள் தான். இதில் கராத்தே பாபு வரும் கோடை காலத்தில் வெளியாகும் என்று படக்குழு சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தது. இப்படி இருக்கையில் கராத்தே பாபு படத்தின் படப்பிடிப்பு இன்னும் சுமார் 20 நாட்கள் இருப்பதாகவும், அதற்கு வந்து நடித்துக் கொடுக்காமல் ரவி மோகன் இழுத்தடிப்பதாகவும் அதற்கு காரணம் அவரது தோழி கெனிஷா என்றும் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.
அதாவது, இது தொடர்பாக வலைப்பேச்சு யூடியூப் சேனலில் அவர் கூறுகையில், "ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் கராத்தே பாபு படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் மீது நல்ல நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிய இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது. அப்படி இருக்கையில், அந்த 20 நாட்களை ஒதுக்கிக் கொடும்மால் ரவி மோகன் சுமார் நான்கு, ஐந்து மாதங்கள் இழுத்தடிக்கிறாராம்.

இதுதான் பிரச்னை: அதற்கு காரணம், படப்பிடிப்பு வரும் போது ரவி மோகன் அவரது தோழி கெனிஷா உடன் தான் வருகிறாராம். அப்படி வரும்போது கெனிஷாவுக்கும் கராத்தே பாபு படத்தின் நடிகைக்கும் இடையில் ஏதோ பிரச்னை ஏற்பட்டு விட்டதாகவும், அதனால் தான் ரவி மோகன் இந்த 20 நாட்களை ஒதுக்கிக் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார் என்று கூறப்படுகிறது என்று தெரிவித்தார்.
ரசிகர்கள் கமெண்ட்: பிஸ்மி இவ்வாறு தெரிவித்துள்ளது, தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ரவி மோகன் திரை வாழ்க்கையில் கராத்தே பாபு படம் மிகவும் முக்கியமான படமாக இருக்கும் என்றும், இந்த படத்தின் ப்ரோமோவிலேயே ரவி மோகன் மிகவும் பிரமாதமாக இருப்பதாகவும் பாராட்டுகளைப் பெற்று வருகையில், இப்படிச் செய்கிறாரே என்று வேதனை பட்டு வருகிறார்கள். ரவி மோகன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்ததாக பலரும் பாராட்டினர்.


Click it and Unblock the Notifications