Vijayakanth - பாலாவுடனான பிரச்னை.. அஜித்துக்கு விஜயகாந்த் உதவவில்லை.. பரபரப்பை கிளப்பிய பத்திரிகையாளர்
சென்னை: கேப்டன், புரட்சி கலைஞர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். பல உதவிகளை செய்திருக்கும் அவர் நடிகராக மட்டுமின்றி தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் உடல்நலக்குறைவால் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இந்தச் சூழலில் பிரபல நடன அமைப்பாளராக இருந்த புலியூர் சரோஜா விஜயகாந்த் குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார்.
விஜயகாந்த்தின் படங்கள் அனைத்தும் வரிசையாக ஹிட்டடித்தன. அதன் காரணமாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என்ற வரிசை தமிழ் சினிமாவில் உருவானது. சொல்லப்போனால் கிராமத்து பகுதிகளில் ரஜினி, கமல் ஹாசனைவிடவும் அதிக மவுசு விஜயகாந்த்துக்கு இருந்தது என்பதுதான் யதார்த்தமான உண்மை. மேலும் நமது வீட்டில் இருந்து ஒருவர் நடிக்க சென்றால் எப்படி இருப்பாரோ அதேபோல்தான் விஜயகாந்த்தும் இருந்தார் என்று பலரும் கூறுவார்கள்.

நடிகர் சங்க தலைவர்: நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பேற்று அதனையும் திறம்பட கையாண்டார். கடனில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை அவர்தான் அதிலிருந்து மீட்டார். மேலும் அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர், மலேசியா சென்று கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினார் அவர். அதுமாதிரி இன்றுவரை ஒன்று நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் என்ட்ரி: நடிகர், நடிகர் சங்க தலைவர் என பிஸியாக இருந்த அவர் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால் இடையில் அவர் எடுத்த சில தவறான முடிவுகள், உடல்நலக்குறைவு ஆகியவை காரணமாக சறுக்கலை சந்தித்தார். பிறகு அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் டிசம்பர் மாதம் உயிரிழந்தார்.
விஜயகாந்த்தின் கரங்கள் ஏகப்பட்ட பேருக்கு உதவியிருக்கின்றன அந்த உதவியின் காரணமாக நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கும் சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை அதிகம் பேர் இருக்கிறார்கள். அந்த செலிபிரிட்டிகளில் ஒருவர்தான் விஜய். விஜய் மட்டுமின்றி சூர்யா, ஷாம் என பலருக்கும் பிரச்னை வந்தபோது முதல் ஆளாக களத்தில் இறங்கி தன்னால் முடிந்த உதவியை செய்துகொடுத்தவர். ஹீரோக்களை மட்டும் கவனிக்காமல் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்காகவும் அவர் பல உதவிகளை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் வரவில்லை: இதற்கிடையே விஜயகாந்த் உயிரிழந்தபோது அவரது உடலுக்கு விஜய் உள்ளிட்ட நடிகர்களும், சில நாட்கள் கழித்து அவரது நினைவிடத்துக்கு சூர்யா, விஷால் உள்ளிட்ட நடிகர்களும் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் அஜித்குமாரோ இதுவரைக்கும் விஜயாகாந்த்தின் நினைவிடத்துக்கு செல்லவில்லை. அதேசமயம் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி இறந்ததற்கு சென்றார். அதை யாரும் விமர்சிக்காவிட்டாலும் விஜயகாந்த்துக்கும் அஞ்சலி செலுத்தியிருக்கலாமே என்று பேச ஆரம்பித்திருக்கின்றனர்.'
ஏன் வரவில்லை: இந்நிலையில் பத்திரிகையாளர் வலைப்பேச்சு சக்திவேல் இதுகுறித்து அளித்த ஒரு பேட்டியில், "இயக்குநர் பாலாவுக்கும் அஜித்துக்கும் இடையே பிரச்னை வந்தபோது விஜயகாந்த் அஜித்துக்கு உதவி செய்யவில்லை என்ற கருத்து பரவலாக வந்தது. அதன் காரணமாகக்கூட அஜித் வராமல் இருந்திருக்கலாம் என்று ஒரு பேச்சும் அடிபட்டிருக்கிறது. ஆனால் உண்மையிலேயே இதைப் பற்றி விஜயகாந்த்திடம் சொல்லியிருந்தால் அஜித்துக்கு அவர் உதவி செய்திருப்பார்" என்றார்.
என்ன பிரச்னை: முன்னதாக பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படத்தில் அஜித்தான் முதலில் ஹீரோவாக கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். அச்சமயத்தில் ஹோட்டலுக்கு அஜித்தை அழைத்த பாலா அங்கு வைத்து தாக்கிவிட்டதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











